இந்திய ஹாக்கி பயிற்சியாளராக பாஸ்கரன் மீண்டும் நியமனம்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணிக்கு அவர் தலைமைப் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷுடன் இணைந்து பயிற்சியளிப்பார்.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள சாய் மையத்தில் நடைபெறுகிறது. அங்கு இந்திய அணிக்கு பாஸ்கரன் பயிற்சியளிக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த பாஸ்கரன், ஏற்கெனவே 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு பயிற்சியளித்துள்ளார்.

பாஸ்கரனின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 187 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரு உலகக் கோப்பைகளும், 2000 ஒலிம்பிக் போட்டியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE