2-வது டெஸ்ட்: இலங்கை வெற்றி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

துபையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 165 ரன்களும், இலங்கை 388 ரன் களும் எடுத்தன. இதன்பிறகு 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 137.3 ஓவர் களில் 359 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து 137 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே-ஜே.கே.சில்வா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40.3 ஓவர்களில் 124 ரன்கள் சேர்த்தது. ஜே.கே.சில்வா 134 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, குமார் சங்ககாரா களம்புகுந்தார். இறுதியில் இலங்கை 46.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கருணாரத்னே 62, சங்ககாரா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் குவித்த ஜெயவர்த்தனா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி சார்ஜாவில் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்