கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான்: வங்கதேசம் அதிர்ச்சி

By இரா.முத்துக்குமார்

பாகிஸ்தான் தனது வங்கதேச கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்தது குறித்து வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை கூட இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளைவிருந்தது.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூறும்போது, “2015-ல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு வாரியங்களுக்கும் இடையே நிதிப்பிரச்சினைகள் கூட இருந்தன, ஆனாலும் 2017-வரை இங்கு வந்து ஆடுவோம் என்றே பாகிஸ்தான் கூறி வந்தது. அதாவது வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் வருகை தரும் முன்பாக பாகிஸ்தானில் இரண்டு டி20 ஆடுமாறு கேட்டனர். நாங்கள் அங்கு ஆட விரும்பவில்லை. ஒட்டுமொத்த தொடரும் வங்கதேசத்தில்தான் நடைபெற வேண்டும்.

இப்போது அதிகாரபூர்வமாக தொடர் ரத்து என்றால் நாங்கள் அவர்களுடன் பேசியாக வேண்டும். நிதி விவகாரங்கள் தீர்க்கப்பட்டு விட்டன, எனவே பிரச்சினை அதுகாக இருக்க முடியாது. ஊடகங்கள் மூலம்தான் நாங்கள் தொடர் ரத்தானதை தெரிந்து கொண்டோம் அவர்களிடமிருந்து இன்னமும் அதிகாரபூர்வமாக எங்களுக்கு ரத்து செய்தி வரவில்லை.” என்றார்.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் ஆடி உறுதி மொழியைக் காப்பாற்றியது, ஆனால் வங்கதேசம் பாகிஸ்தானில் வந்து ஆடவில்லை எனவே தொடரை ரத்து செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்