சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கோப்பையை வெல்வது யார் என்பதைப் பற்றி சிந்திப்பதைவிட அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம் என கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாதில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன்மூலம் 3-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணியில் கம்பீர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விரைவாக வெளியேறியபோதும் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய கம்பீர் மேலும் கூறியதாவது: கோப்பையை வெல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. லீக் சுற்றே இன்னும் முடியவில்லை. கடைசி லீக் ஆட்டத்தில் டால்பின்ஸுடன் மோத வேண்டியுள்ளது. அதன் பிறகு அரையிறுதிப் போட்டி இருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல ஓர் அணி சிறந்த அணி என்பதற்காக மிக முன்கூட்டியே அந்த அணிதான் கோப்பையை வெல்லும் என எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒவ்வொரு ஆட்டத்திலும் முழு பலத்துடன் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பது எங்களுக்கு மிக முக்கியமானதாகும். எனவே அடுத்த போட்டியில் மட்டுமே எங்கள் கவனம் உள்ளது. இதுவரை நாங்கள் அப்படித்தான் விளையாடி வந்திருக்கிறோம். அப்படி இல்லாவிட்டால் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார். கொல்கத்தா அணி இதுவரை தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
டிரைடென்ட்ஸ்-கேப் கோப்ராஸ்
இடம்: மொஹாலி, நேரம்: மாலை 4
பஞ்சாப்-நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்
இடம்: மொஹாலி, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago