உலகக் கோப்பை ஹாக்கி: உத்தேச இந்திய அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் வரும் மே 31-ம் தேதி முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்காக 33 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கான பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் ஹாக்கி மைதானத்தில் வரும் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. சந்தீப் சிங், குர்பஜ் சிங் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். கோல் கீப்பர் பி.டி. ராவ் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்ஜோத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை அட்டவணையில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, மே 31-ம் தேதி பெல்ஜியத்தையும், ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்தையும், ஜூன் 5-ம் தேதி ஸ்பெயினையும், ஜுன் 7-ம் தேதி மலேசியாவையும், ஜூன் 9-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.

அணி விவரம் கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங், சுஷாந்த் திர்கே. தடுப்பாட்டம்: குர்பஜ் சிங், ரூபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், பைரேந்திர லகரா, குர்மைல் சிங், கோதாஜித் சிங், கதங்பம், குர்ஜிந்தர் சிங், குரீந்தர் சிங், சந்தீப் சிங், விக்ரம் காந்த். நடுகளம்: எஸ்.கே.உத்தப்பா, சிங்லென்சனா சிங், சர்தார் சிங், மன்பிரீத் சிங், டேனிஸ் முஜ்தபா, சத்பிர் சிங், தேவிந்தர் சுநீல் வால்மீகி, விகாஸ் பிள்ளை, ஜேஸ்ஜித் சிங். முன்களம்: நிகின் திம்மையா, நிதின் திம்மையா, எஸ்.வி.சுநீல், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், அஃபான் யூசுப், யுவராஜ் வால்மீகி, தல்விந்தர் சிங், லலித் உபத்யாய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்