தோனியின் உதவியுடன் சச்சின், திராவிட், கவாஸ்கர் உள்ள அரிய சாதனைப் பட்டியலில் இணைய ஷிகர் தவண் செய்தது என்ன?

By இரா.முத்துக்குமார்

இங்கிலாந்தில் தன் சொதப்பலான பேட்டிங் மூலம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நன்றாக ‘வாங்கிக் கட்டிக் கொண்ட’ ஷிகர் தவண் தற்போது முழங்கால் அளவு வரும் பந்துகளுக்கு கத்தி வீசிக் கொண்டிருக்கிறார்.

ஆசியக் கோப்பையில் இடுப்புக்குக் கீழ் வரும் ஸ்விங் ஆகாத நேர் பந்துகளில் தன்னை விட்டால் தாதா யார் என்பது போல் அனாயசமாக ஆடிவரும் ஷிகர் தவண், இங்கிலாந்தில் கேட்ச்களை விட்டு விட்டு அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர்தான் இப்போது ஒருநாள் போட்டியில் கேட்ச்களில் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது என்ன ஒரு சிறந்த நகை முரண்?!

வங்கதேசத்துக்கு எதிராக சூப்பர்4 ஆசிய கோப்பை போட்டியில் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்த்பிசுர் ரஹ்மான் ஆகியோரது கேட்ச்களை எடுத்து ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 4 கேட்ச்களைப் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத 7வது இந்திய பீல்டர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஷிகர் தவன்.

இதில் ஷாகிப் அல் ஹசன் கேட்சுக்கு ஷிகர் தவண் தோனிக்குத்தான் நன்றி கூற வேண்டும், அவர் மட்டும் ரோஹித் சர்மாவை அழைத்து டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் இவரை நிறுத்த அறிவுறுத்தியிருக்கா விட்டால், ஷாகிபின் ஈகோவை சோதித்திருக்காவிட்டால், அவரும் பொறியில் சிக்காதிருந்தால் இந்தச் சாதனையை ஷிகர் தவண் நிகழ்த்தியிருக்க முடியாது.

இந்த 7 கேட்ச்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர் (மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராக) ,திராவிட், கயீஃப், லஷ்மன் ஆகியோர் உள்ளனர் இதில் தவண் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்