ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 4ம் நிலையில் களமிறக்க ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரெய்னா, ராகுல் என்று தெரிவுகள் வலுவாக இருந்தாலும் 4ம் நிலைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை.
உலகக்கோப்பை நெருங்கும் சமயத்தில் தோனி 2019 உலகக்கோப்பையில் ஆடுவதை உறுதி செய்து அவரையே 4ம் நிலையில் நிரந்தரமாக இறக்க வேண்டும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
“4-ம் நிலை பொறுப்பை யாராவது எடுத்துக் கொள்ள வேண்டும். அது எம்.எஸ்.தோனியாகவே இருக்க முடியும். இந்திய அணியின் தோல்விகளைப் பார்க்கும் போது நல்ல தொடக்கம் இல்லாததே காரணமாக உள்ளது. மோசமான தொடக்கத்திலிருந்து பின்னால் மீள முடிவதில்லை.
எனவே 4ம் நிலையில் அனுபவமிக்க வீரர் இறங்க வேண்டும். அந்த நிலையில் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வெற்றிப்பாதைக்குத் திருப்பும் வீரர் தேவை. அவர் அவருடன் தனக்கு பின்னால் வரும் வீரர்களையும் ஆட வைப்பவராக இருக்க வேண்டும், இதற்கு தோனியை விட்டால் வேறு ஆளில்லை” என்றார் ஜாகீர் கான்.
தோனியின் கடைசி 11 ஒருநாள் இன்னிங்ஸ்களின் ஸ்கோர்: 25, 18, 25, 65, 7, 4, 10, 42, 13, 37, 42.
4ம் நிலையில் இறங்கி ஆடினால் அவர் தனது நிலைத்து ஆடும் தன்மையையும் அதே வேளையில் அடித்து ஆடும் திறமையையும் ஒருங்கிணைக்க முடியுமா என்பதே கேள்வி, அவரது ஸ்ட்ரைக் ரேட் 88.13 ஆகக் குறைந்துள்ளது. ஓவருக்கு 7-8 ரன்கள் என்று இருந்தால் கூட அவரால் வெற்றி பெறச் செய்ய முடியவில்லை என்பதே தற்போதைய எதார்த்தம். இப்படியிருக்கையில் தோனியா அல்லது வேறு ஒரு இளம் வீரரா என்பதை அணித்தேர்வுக்குழு 4ம் நிலைக்கு முடிவு செய்ய வேண்டியதே சரியானதாக இருக்க முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago