ஆஸ்திரேலிய அணி இப்போது இருக்கும் சூழலில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணிக்குத் திரும்பினால் அனைவரும் வரவேற்பார்கள், ஆனால், வார்னரை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்று முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதையடுத்து, இவர்களில் வார்னர், ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத்தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.
இந்நிலையில், முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. இருவரும் இல்லாத சூழலில் இங்கிலாந்து படுதோல்வியடைந்து நாடு திரும்பியது. பலவீனமாக இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இப்போது ஸ்டீவ் ஸ்மித் தேவை என்று முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஸ்டீவ் வாஹ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
ஆஸ்திரேலிய அணி இப்போது இருக்கும் சூழலில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும். ஒருநாள் இரவில் ஒரு திறமையான வீரரை நாம் இழந்துவிட முடியாது, அவரை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும், இளமையான வீரர் அதிகமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது.
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 3 வீரர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் ஸ்மித் கண்ணீர் மல்க மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ரசிகர்களும் அவரை மன்னித்து விட்டனர். இன்னும் ஸ்மித் மீது பேரன்பாக இருக்கிறார்கள். ஸ்மித் தான் செய்த தவற்றுக்கு அதிகபட்சமான விலையைக் கொடுத்துவிட்டார்.
மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் ஸ்மித்தை விளையாட அனுமதித்தால், வழக்கம்போல் உத்வேகத்துடன், உற்சாகத்துடன், ரன் சேர்க்கும் ஆசையுடன் விளையாடுவார். ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்குள் மீண்டும் வரவேண்டும், ரசிகர்களும், மக்களும் ஸ்மித்தை இரு கரம் திறந்து வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
ஆனால், டேவிட் வார்னருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அன்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், வார்னருக்கும் 2-வது வாய்ப்பு கொடுக்க வேண்டும், கொடுப்பார்கள் என நம்புகிறேன். வார்னரும் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரிவிட்டார். ஆனால், வார்னர் மீண்டும்வந்து கிரிக்கெட்டில் உச்ச நிலையை அவர் அடைவது மிகக் கடினமாகும்.
இவர்கள் 3 பேரும் மீண்டும் அணிக்குத் திரும்பிவந்து தங்களை நிரூபிக்கும் வரை சவாலாகத்தான் இருக்கும், மக்கள் நினைப்பதுபோல் இவர்கள் சாதிப்பது எளிதாக இருக்காது. நீங்கள் 12 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துவிலகிவிட்டீர்கள். போட்டிகளும் கடந்துவிட்டன. உங்களின் திறமையும் தேக்கமடைந்துவிட்டது. இந்த நேரத்தில் தன்னம்பிக்கை குலையாமல் விளையாடுவது அவசியமாகும்
இவ்வாறு ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago