சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 1998ஆம் ஆண்டு தன்ராஜ் பிள்ளை தலைமையில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்ததை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சற்று முன்பாக மே மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 9வது இடத்தில் முடிந்தது.
நியூசிலாந்து, மலேசியா, போலந்து அணிகளே இந்தியாவுக்கு பின் நிலையில் இருந்த அணிகளாகும்.
அந்த பின்னடைவிலிருந்து மீண்டெழுந்து 1998ஆம் ஆண்டு டிசம்பரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தென் கொரியாவை பெனால்டி முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்றது.
இந்தியாவின் இந்தத் திருப்பத்திற்குக் காரணம் அதிவேக மன்னன் தன்ராஜ் பிள்ளையின் ஆட்டம் என்றால் மிகையாகாது. தன்ராஜ் பிள்ளையின் ஹாக்கி வாழ்க்கையில் மிகவும் அபாரமான தொடராக அந்த ஆசியப் போட்டிகள் இடம்பெற்றது.
பாங்காக் ஆசிய போட்டிகளில் 6 போட்டிகளில் 11 கோல்களை கேப்டன் தன்ராஜ் பிள்ளை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குரூப் பிரிவு லீக் ஆட்டங்களில் முதல் 3 போட்டிகளில் தன்ராஜ் 8 கோல்களை அடித்திருந்தார்.
அந்த ஆசியப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மொத்தம் 24 கோல்களை அடித்தது. அதில் பாதிக்கும் சற்று குறைவாக தன்ராஜ் பிள்ளையின் பங்களிப்பு இருந்தது.
செயற்கை விளையாட்டுத் தரை அமைக்கப்பட்ட பின்பு ஒரு இந்திய வீரரின் மகத்தான சாதனையாகும் இது.
பாங்காக் ஆசிய விளையாட்டில் தன்ராஜ் பிள்ளை தனது அபார வேகம் மற்றும் பந்தை கடைந்து எடுத்து முன்னேறிச் செல்வது மற்றும் சுயமாகவே கோல்களை அடிப்பது அல்லது சிறப்பான பாஸ்களை செய்வது என்று முழுத்திறமையை வெளிப்படுத்தினார்.
முகேஷ் குமார், சாபு வார்கி, பல்ஜித் சிங் தில்லான் ஆகியோருடன் இணைந்து பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுதினார் தன்ராஜ்.
சிங்கப்பூருக்கு எதிரான முதல் போட்டியில் தன்ராஜ் 4 கோல்களை அடிக்க இந்தியா 9-0 என்று வெற்றி பெற்றது. அடுத்து பங்களாதேஷை 7-0 என்று வென்றது. 3 கோல்கள் தன்ராஜ் பிள்ளை அடித்தது.
சீனாவுக்கு எதிராக 2-1 என்று வெற்றி ஒரு கோல் தன்ராஜ் மற்றொரு கோல் முகேஷ் குமார். பிறகு தென் கொரியாவை 2-1 என்று வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தானைச் சந்திப்பதை தவிர்த்தது.
அரையிறுதியில் ஜப்பானை இந்தியா சவுகரியமாக 3-1 என்று வீழ்த்தியது. தன்ராஜ் ஒரு அபாரமான கோலை அடித்தார்.
இறுதிப் போட்டி தென் கொரியாவுடன் நடந்தது. முதல் கோலை கொரியா அணியே அடித்தது. ஆனால் தன்ராஜ் பிள்ளை அதன் பிறகு வெகுண்டெழுந்து மகத்தான ஆட்டத்தினால் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.
அதன் பிறகு ஆட்டம் பெனால்டி நிலைக்குச் செல்ல இந்தியாவின் கோல் கீப்பர் பலான் 2 பெனால்டி ஸ்ட்ரோக்குகளை அபாரமாகத் தடுத்தார். 4-2 என்று இந்தியா வெற்றி பெற்றது. அதாவது மொத்தமாக 5-3 என்று இந்தியா வென்று தங்கம் வென்றது.
இந்நிலையில் இந்தியா இறுதிப் போட்டியில் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல தன்ராஜ் பிள்ளைக்கு அன்றைக்கு இருந்த உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பெறுவது அவசியம்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகிற்கு இந்திய ஹாக்கியை தலைநிமிரச் செய்ய அருமையான வாய்ப்பு. இந்தியா அதனைச் சாதிக்க வாழ்த்துவோம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
விளையாட்டு
44 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago