சாம்பியன்ஸ் லீக் டி20: பஞ்சாப்-ஹரிகேன்ஸ் இன்று பலப்பரீட்சை

By பிடிஐ

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா) அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் மொஹாலியில் நடைபெறுகிறது.

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடும் முதல் சாம்பியன்ஸ் லீக் போட்டி இதுதான். கடந்த ஐபிஎல் போட்டியில் வாணவேடிக்கை காட்டிய பஞ்சாப், பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் சாம்பியன்ஸ் லீக்கிலும் ரசிகர்களை ரன் மழையில் நனைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி சேவாக், விருத்திமான் சாஹா, கிளன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், மனன் வோரா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் எதிரணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் பவுண்டரிக்கு வெளியே விரட்டிய கிளன் மேக்ஸ்வெல், இந்த முறையும் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விளையாடாதது அந்த அணியின் பந்துவீச்சில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வேகப்பந்து வீச்சில் அக்ஷர் பட்டேல், எல்.பாலாஜி, திசாரா பெரேரா ஆகியோரையே நம்பியுள்ளது பஞ்சாப். அதேநேரத்தில் டிம் பெய்ன் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியிலும் டக் போலிங்கர், பென் ஹில்பெனாஸ், ஷோயிப் மாலிக், சேவியர் டோஹெர்ட்டி போன்ற அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர்.

ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளர் டேமியன் ரைட் கூறுகையில், “முதல்முறையாக நாங்கள் சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்குகிறோம். இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டியில் விளையாடுவது அனைவருக்கும் அற்புதமானது. ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் எங்கள் அணியிலும் உள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி போன்ற பெரிய போட்டிகளில் அனுபவமிக்க வீரர்களுடன் பங்கேற்பது சிறப்பானது” என்றார்.

ஜான்சன் விளையாடமாட்டார்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனின் விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் உடனடியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணையமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முடநீக்கியல் நிபுணர் அலெக்ஸ் கோன்டோரியஸ் கூறுகையில், “ஜிம்பாப்வே தொடரின்போது ஜான்சனுக்கு விலா எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலிய திரும்பிய பிறகு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் விலா எலும்பில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக அவருக்காக சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவரின் காயம் குறித்து அடுத்த வாரம் பரிசோதிக்கப்படும்” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் பொது மேலாளர் (செயல்பாடு) பட் ஹோவர்ட் கூறுகையில், “மருத்துவர் களின் அறிவுரைப்படி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட ஜான்சனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவருக்கு சிகிச்சை எந்த அளவுக்கு பலனளித்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அவரை சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), வீரேந்திர சேவாக், அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, எல்.பாலாஜி, ரிஷி தவன், மிட்செல் ஜான்சன், கரண்வீர் சிங், மன்தீப் சிங், கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா, விருத்திமான் சாஹா, மனன் வோரா.

ஹரிகேன்ஸ்: டிம் பெய்ன் (கேப்டன்), டிராவிஸ் பேர்ட், எய்டன் பிளிஸ்ஸார்ட், டக் போலிங்கர், கேமரூன் பாய்ஸ், சேவியர் டோஹெர்ட்டி, பென் டங்க், இவான் குல்பிஸ், பென் ஹில்பெனாஸ், பென் லாஃப்லின், ஜோ மென்னி, டாம் மைக்கேல், சாம் ரெய்ன்பேர்ட், ஷோயிப் மாலிக், ஜொனாதன் வெல்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்