இங்கிலாந்தில் அடில் ரஷீத், இங்கு வாசிம் ஜாஃபர்

By இரா.முத்துக்குமார்

செப்.2 முதல் அக்டோபர் 8 வரை பெங்களூருவில் நடைபெறும் விஜய் ஹஜாரே ஒருநாள் தொடருக்கான விதர்பா அணியில் 40வயதான முன்னாள் இந்திய, மும்பை வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறுகிய வடிவப் போட்டிகள் பொதுவாக இளைஞர்களுக்கானது. ஆனால் வாசிம் ஜாஃபர் விதர்பா அணியுடன் சில காலங்கள் வீரராகவும் ஆலோசகராகவும் இளம் வீர்ர்களுக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றி வருவதால் இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாள் அணியில் 40 வயதிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளை ஜாஃபர் ஆடி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. எப்படி சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்கே முழுக்குப் போட்ட லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத்தை இங்கிலாந்து தேர்வு செய்ததோ, அதேபோல் விதர்பா அணி வாசிம் ஜாஃபரை 40 வயதில் ஒருநாள் போட்டியிலிருந்தே அவர் கவனம் திசைமாறிய பிறகு தேர்வு செய்துள்ளது.

மேலும் ஜாஃபர் இல்லாமலேயே ஒருநாள் உள்நாட்டு போட்டித் தொடர்களில் விதர்பா அணி 6 ஆண்டுகளில் 4 முறை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் வாசிம் ஜாஃபர் தேர்வு அங்கு உள்ள மற்ற மூத்த வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் சிலரை வயது காரணமாக விதர்பா ஒதுக்கி வைத்திருந்த நிலையில் வாசிம் ஜாஃபருக்கு மட்டும் ஏன் இந்த முன்னுரிமை என்று அங்கு எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்