இந்தியாவுக்கு தங்கம் தந்த இரட்டையர் சீட்டு ஆட்டம்

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஆசிய விளையாட்டுப் போட்டி யில் இந்தியா, ‘பிரிட்ஜ்' எனப்படும் சீட்டு ஆட்டத் தில் தங்கம் வென்றது. இயற்கை யாகவே எழுகிற கேள்வி- ‘சீட்டு ஆடுவதில், சர்வதேசப் போட்டியா...?'

சதுரங்கப் போட்டிக்கு இணை யாக, மூளைக்கு சவால் விடுகிற விளையாட்டுதான் ‘பிரிட்ஜ்'. ஒரு சீட்டுக் கட்டில் இருக்கிற 52 அட்டைகளைக் கொண்டு நான்கு பேர் ஆடுவது. இது ஒரு, ‘இரட்டை யர்' விளையாட்டு. அதாவது, வடக்கு - தெற்காக இருக்கிற இருவருக்கும், கிழக்கு - தெற்காக அமர்ந்து இருக்கிற இருவருக்கும் இடையிலான போட்டி. கடினமான கணக்குப் புதிர் போன்றது - ஒவ்வொரு போட்டியும். ஒரு கட்டில் உள்ள ‘ஆஸ்', ராஜா, ராணி மற்றும் ஜாக்கி சீட்டுகளுக்கு முறையே 4, 3, 2 மற்றும் 1 புள்ளி மதிப்பீடும், 10-ல் தொடங்கி 2 வரை உள்ள மற்ற சீட்டுகளுக்கு, அதே வரிசையில், புள்ளிகளற்ற சில்லரை மதிப்புகளும் தரப்படும்.

இதே போன்று, ஒரு கட்டில் உள்ள நான்கு பிரிவுகளில், ‘ஸ்பேட்', ‘ஆட்டின்', ‘டைமண்ட்', ‘க்ளாவர்' என்று அதன் மதிப்பீட்டில் மேல் இருந்து கீழாகத் தரம் பிரிக்கப்படுகிறது.

தங்கள் கையில் உள்ள 13 சீட்டுகளைக் கொண்டு, தங்களால் எத்தனை சுற்றுகளைக் கைப்பற்ற முடியும் என்று ‘பிரிட்ஜ்' விதிகளின் படி, தகவல் பரிமற்றம் செய்து கொள்வார்கள். இதனை, ‘பிட்டிங்' (bidding) என்பார்கள். இதுதான் இந்த ஆட்டத்தின் இதயம் போன்றது.

தம் கையில் எந்தெந்தப் பிரிவில் எத்தனை சீட்டுகள், எத்தனை புள்ளி கள் உள்ளன என்பதை, ‘சங்கேத' மொழியில் தெரியப் படுத்துவார் கள். இதிலே முக்கியமான அம்சம் - ஒரே அணியைச் சேர்ந்த இருவரும் கூடத் தங்களுக்குள் மறைமுகமாக எதுவும் பேசிக் கொள்ள முடியாது. ‘பிட்டிங்' விதிமுறைகள் மிகச் சரியாகத் தெரிந்து இருக்க வேண்டும். அதில் தவறு இழைத்தால், ஆட்டமே போய்விடும்.

‘ப்ரெசிஷன்', ‘ஸ்டாண்டர்ட்' என்று இரண்டு வழிமுறைகள் உள்ளன. பொதுவாக எல்லாருக்குமே, இரண்டு முறைகளுமே நன்கு தெரிந்து இருக்கும். ஆனால் ஒன்றைத்தான் பயன்படுத்துவார்கள். அந்த வகையில், ‘ஸ்டாண்டர்ட்’ முறைதான், இப்போதைக்கு மிகப் பிரபலமாக இருக்கிறது. (ஆனால் எனக்கு மிகவும் விருப்பமானது - ‘ப்ரெசிஷன்’ முறைதான்!) ‘பிட்டிங்' முடிவில் யார் அதிக சுற்றுகள் வெற்றி பெறுவதாக சொல்கிறாரோ, அவரது சகா (Partner), அந்தச் சுற்று ஆட்டத்துக்கு மட்டும், ‘டம்மி' என்று அழைக்கப்படுவார். தன் கையில் உள்ள 13 சீட்டுகளையும், அனைவரும் பார்க்கும் வண்ணம் மேசையின் மீது, திறந்தபடி வைத்து விடுவார். இதன் காரணமாக, தன் கையில் உள்ள 13 சீட்டுகள் மற்றும் திறந்துள்ள டம்மியின் 13 சீட்டுகள் என்று மொத்தம் 26 சீட்டுகள் என்னென்ன என்பது தெரிந்து விடும். மீதம் உள்ள 26 சீட்டுகளைக் கணித்து விளையாட வேண்டும்.

ஒவ்வொரு சுற்றும் சுமார் 3 நிமிடங்களில் முடிந்து விடும். எத்தனை விரைவாகக் கணக்கிட்டு விளையாட வேண்டி இருக்கும்...? அதுதான் இவ்வாட்டத்தின் ஆகச் சிறந்த சவால். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகக் கடுமையாக போராடி, மிகக் கவனமாக விளையாடி, தங்கம் பெற்று இருக்கிறோம்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் பரவலாக உள்ள இந்த விளையாட்டு, இந்தியாவில், மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரம், பெங்களுரு மற்றும் தில்லியில் அதிகம் காணப்படுகிறது. தமிழ் நாட்டிலும், தலைசிறந்த ‘பிரிட்ஜ்' வீரர்கள், பலர் உள்ளனர். சென்னை, கோவையில், வாராந்திர ‘பிரிட்ஜ்' போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

‘சதுரங்கத்தை விடவும் சவாலானது பிரிட்ஜ் ஆட்டம்; திறமையும் சக ஆட்டக்காரருடன் நல்ல புரிதலும் இருந்தால் மட்டுமே இப்போட்டியில் வெல்ல முடியும்' என்கிறார்கள் தங்கம் வென்ற பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்க்கார். உண்மைதான்.

சூது என்கிற பிம்பத்தைத் தாண்டி, மூளைக்கு வேலை தருகிற ஒன்றாக, ‘பிரிட்ஜ்' விளையாட்டைப் பார்க்கிற மனநிலை உருவாக ‘ஆசியத் தங்கம்' உதவும். ஒன்றே ஒன்றுதான். ஆரம்பகால சூரத்தனமாக இல்லாமல், தொடர்ந்து ஆசிய ‘பிரிட்ஜ்' சாம்பியன் ஆக இந்தியா தொடர வேண்டும். வாழ்த்துவோம் - இளைஞர்களை ஈர்க்கட்டும், இணைக்கட்டும் - ‘பிரிட்ஜ்'!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்