பாக். மீது பிடியை இறுக்கும் இந்தியா: புவனேஷ் 2 விக்கெட்; முதல் பவுண்டரி 6வது ஓவரில்

By இரா.முத்துக்குமார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் ‘பில்ட் அப்’ போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து வருகிறது, அந்த அணி 8 ஓவர்களில் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

முதல் பவுண்டரியே 6வது ஓவரில் ஷோயப் மாலிக் இறங்கி அடிக்க வேண்டியதாயிற்று. பும்ரா வீசிய ஃபுல் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார் ஷோயப் மாலிக்.

தற்போது ஷோயப் மாலிக் 9 ரன்களுடனும் பாபர் ஆஸம் 12 ரன்களுடனும் ஆடிவருகின்றனர், ரன்கள் அடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் நம்பிக்கையில் குறைவாக இருக்கும் இந்தியப் பந்து வீச்சை ஆக்ரோஷமாக ஆடி அடித்திருக்க வேண்டும், மாறாக ‘பம்மலாட்டம்’ ஆடிவருகின்றனர்.

இமாம் உல் ஹக் 2 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தை மேலேறி வந்து சுழற்ற முயன்றார், பந்தை ஷார்ட் பிட்ச் ஆக்கினார் புவனேஷ் குமார், அவர் சுற்றினார் எட்ஜ் ஆகி தோனியிடம் சென்றது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் சதம் அடித்த மற்றொரு தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 9 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வர் குமார் வீசிய எளிதில் புல் ஆட முடியாத ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை மிட்விக்கெட்டில் கொடியேற்றினார், சாஹல் பிடித்தார்.

புவனேஷ்குமார் 5 ஓவர்கள் 13 ரன்கள் 2 விக்கெட். பும்ரா 4 ஓவர்கள் 10 ரன்கள் விக்கெட் இல்லை. இதில் 2 மெய்டன்கள். பாண்டியா இப்போதுதான் முதல் ஓவரை வீசி வருகிறார், பாகிஸ்தான் 25/2.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்