உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுடனான வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க அணி வீரர் இம்ரன் தகிருக்கு கேப்டன் டூபிளெசிஸ் புகழாரம் சூட்டினார்.
நேற்று முன்தினம் கார்டிப் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 34.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இம்ரன் தகிர் 4 விக்கெட்களை சாய்த்தார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. குயின்டன் டி காக் 68, ஹஷிம் ஆம்லா 41, பெலுக்வாயோ 17 ரன்கள் எடுத்தனர்.
வெற்றிக்குப் பிறகு கேப்டன் டூ பிளெசிஸ் கூறும்போது, “இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். இம்ரன் தகிர், மோரிஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.
இந்த நாள் எங்களுக்கு நல்ல நாளாக அமைந்தது. தொடர்ந்து 3 தோல்விகள், ஒரு ஆட்டம் மழையால் பாதிப்பு என மோசமான நிலையில் இருந்தோம். இப்போது முதல் வெற்றியைப் பெற்றுள்ளோம். குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago