சனிக்கிழமையான இன்று ஓவலில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய அணி எதிர்பாராத சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்து வலைப்பயிற்சியை பாதியில் நிறுத்த நேரிட்டது.
நாளை(9-8-19) ஞாயிறன்று ஆஸ்திரேலியா அணி மிக முக்கியமான போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்கிறது, இதனையடுத்து வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெட் பவுலர் ஜெய்கிஷன் பிளாஹா என்பவர் வீசிய பந்தை வார்னர் சக்தி வாய்ந்த நேர் ட்ரைவ் அடிக்க பந்து பவுலர் தலையைப் பதம் பார்த்தது. அவர் அப்படியே கீழே மல்லாக்க சாய்ந்தார். இதனையடுத்து வார்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கவலையுடன் அவருக்கு அருகில் வந்து அவருக்கு உதவி செய்தனர்.
இதனையடுத்து காயம்பட்ட நெட் பவுலர் ஜெய்கிஷன் பிளாஹா ஸ்ட்ரெச்சரில் மருத்துவ சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு பெரிதான காயம் இல்லை, அவர் கண்விழித்து புன்னகைத்ததாக சக நெட் பவுலர் ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து கவலையில் நிறுத்தப்பட்ட வலைப்பயிற்சி நெட் பவுலருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் தொடங்கியது..
ஐசிசி வென்யு மேனேஜர் கூறும்போது, “நெட் பவுலர் மருத்துவமனைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து செல்லப்பட்டுள்ளார். ஏனெனில் இது தலையில் பட்ட காயம். அவர் நினைவுடன் தான் இருக்கிறார்... பிரச்சினை எதுவும் இல்லை” என்றார்.
ஆனால் பிஞ்ச், வார்னர் இருவரும் கொஞ்சம் ஆடிப்போய்விட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago