1. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் 73 முறையும், இந்திய அணி 53 முறையும் வென்றுள்ளன.
2. இந்தியாவில் விளையாடிய ஒருநாள் போட்டிகள் 30-ல், 11 போட்டிகளில் இந்தியாவும், 19 போட்டிகளி்ல பாகிஸ்தானும் வென்றுள்ளன. பாகிஸ்தானில் நடந்த 24 ஆட்டங்களில் 11-ல் இந்தியாவும், 14-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
3. இரு நாடுகளுக்கும் பொதுவான நாட்டில் மொத்தம் 76 ஆட்டங்கள் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டுள்ளன. அதில் இந்தியா 34 முறையும், பாகிஸ்தான் 40 முறையும் வென்றுள்ளன.
4. இதில் ஒட்டுமொத்தமாக 4 ஆட்டங்களில் முடிவு இல்லை. 2 போட்டிகளில் பாகிஸ்தானில் நடத்தியபோதும், நடுநிலை நாட்டில் நடத்தியபோது 2 போட்டிகளிலும் முடிவு கிடைக்கவில்லை
5. ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக விசாகப்பட்டிணத்தில் 2004-05-ம் ஆண்டு நடந்த ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும்.
6. இரு அணிகளுக்கு இடையே மிகக்குறைவாக கடந்த 1978-79 ம் ஆண்டில் சாய்கோட்டில் இந்திய அணி 79 ரன்களுக்கு சுருண்டது.
7. அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்று எடுத்துக்கொண்டால் 2017- லண்டன் ஓவலில் நடந்த போட்டியில் இந்திய அணியை 180 ரன்களில் பாகிஸ்தான் வென்றதுதான்.
8. மிகக்குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்றால் கடந்த 1978-79-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 4 ரன்னில் வென்றது இந்தியா
9. பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக கடந்த 1989 முதல் 2012-ம் ஆண்டுவரை சச்சின் டெண்டுல்கர் 2,526 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். 2-வதாக இன்சமாம் உல் ஹக்(2,403), 3-வதாக சயித் அன்வர்(2002), ராகுல் திராவிட்(1,899), ஷோயிப் மாலிக்(1661)
10. இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் சென்னையில் நடந்த ஆட்டத்தில் 194 ரன்கள் சேர்த்துள்ளார். 2-வதாக 2012ம் ஆண்டு, மார்ச் 12-ம் தேதி வங்கதேசத்தில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலி 183 ரன்கள் சேர்த்துள்ளார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடந்த ஆட்டத்தில் தோனி 148 ரன்கள் சேர்த்துள்ளார். 2004-ம்ஆண்டு ஜூலை 25-ம்தேதி கொழும்பில் நடந்த ஆட்டத்தில் ஷோயிப் மாலிக் 143 ரன்கள் சேர்த்தார். 2004-ல் சச்சின் 141 ரன்கள் சேர்த்துள்ளார்.
11. இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக வாசிம் அக்ரம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் சக்லைன் முஷ்டாக்(57), அனில் கும்ப்ளே(54),ஜாவித்(54), ஸ்ரீநாத்(54).
12. சிறந்த பந்துவீச்சு என்றால் கடந்த 1991-ம் ஆண்டு, அக்டோபர் 25-ம் தேதி ஷார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆகிப் ஜாவேத் 37 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சிறந்த பந்துவீச்சாகும். இந்திய அளவில் சவுரவ் கங்குலி, டொரான்டாவில் நடந்த ஆட்டத்தில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும்தான் சிறப்பு
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago