11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி:  பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்

By இரா.முத்துக்குமார்

பாரிஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிய இடது கை நட்சத்திரம் ரபேல் நடால், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருக்கு தண்ணி காட்டி நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

 

கடந்த முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடால் களிமண் தரையில் ஒரு தாதா. இந்நிலையில் பெடரரை நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஒரு கிராண்ட் ஸ்லாம் தோல்வியை பெடரருக்கு அளித்தார்.

 

இறுதியில் ஜோகோவிக் அல்லது ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தியம் ஆகிய இருவரில் ஒருவரை நடால் வரும் ஞாயிறன்று எதிர்கொள்வார்.

 

இந்த கிராண்ட் ஸ்லாமை வென்றால் நடால் 12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்று சாதனை படைப்பார்.

 

களிமண் தரை டென்னிஸ் ஆட்டங்களில் பெடரருக்கு எதிராக 24-15 என்ற வெற்றி விகிதத்தை நடால் பெற்றுள்ளார். மேலும்,  பிரெஞ்சு ஓபன் போட்டி நடக்கும் களிமண் தரையில் பெடரருக்கு எதிராக 14-2 என்ற கணக்கில் நடால் வெற்றி விகிதத்தை தக்க வைத்துள்ளார்

 

நடால் இந்த ஆட்டத்தில் 19 முறை அன்ஃபோர்ஸ்டு தவறுகளைச் செய்தார், ஆனால் 33 வின்னர் ஷாட்களை அடித்து அதிர்ச்சியளித்தார்.  பெடரர் மாறாக 25 வின்னர்களையே அடித்தார்.

மேட்ரிடில் 2009-ல் களிமண் தரையில் நடாலை வென்றதோடு சரி அதன் பிறகு களிமண் தரையில் நடாலை வீழ்த்த இன்னமும் போராடி வருகிறார் ரோஜர் பெடரர். 6வது முறையாக தொடர்ச்சியாக பாரிஸ் களிமண் தரையில் பெடரரை காலி செய்துள்ளார் நடால்.

 

ஆனால் இன்னொன்றையும் கூற வேண்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெடரரை முதன் முதலில் வீழ்த்துகிறார் நடால்.  மேலும் 5 போட்டிகள் பெடரரிடம் தோற்றதற்கும் இந்த வெற்றி மூலம் நடால் முற்றுப்புள்ளி வைத்தார்.

 

ஆட்டத்தில் கடும் காற்று வீசி மணல் தூசி மைதானத்தை ஆக்ரமித்தது.  இதற்கு முன்பாக ரோலாண்ட் கேரோஸில் நடாலை 4 இறுதிப் போட்டிகளுடன் 5 போட்டிகளில் பெடரர் சந்தித்த போது ஒரு செட்டுக்கும் மேல் வென்றதில்லை. இந்த முறை 6-3, 6-4, 6-2 என்று நேர் செட்களில் தோல்வி.

 

ஆனால் ஆட்டத்தில் பெடரர் அச்சமற்ற போக்கைக் கடைபிடித்தார், அவர் பாணி ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை, நடால் மெதுவே பெடரரைக் களைப்படையச் செய்தார்.

 

முதல் 2 செட்களில் இருவரும் ஆடிய தரமான டென்னிஸ் உண்மையில் ஆச்சரியகரமான திறமையைக் காட்சிப்படுத்துவதாக அமைந்தது.  ஆனால் நடால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டு ஓய்வு ஒழிச்சலில்லாமல் வின்னர்களை அடித்து பெடரரை எழும்ப விடாமல் செய்தார்.

 

ஆட்ட புள்ளிவிவரங்கள் என்று பார்த்தால் ஏஸ் சர்வ்களை இருவருமே சரிசமமாக 3 முறை அடித்தனர். டபுள் பால்ட்களை இருவரும் ஒருமுறை செய்தனர். ஆனால் முதல் சர்வ் வெற்றியில் பெடரர் 61% வெற்றி என்றால் நடால் 68% வெற்றி பெற்றார். 2வது சர்வில் வெற்றி பெற்றதில்தான் நடால் 57%-ம் பெடரர் 39%ம் வெற்றி கண்டனர், இதில்தான் பெடரர் தோல்வி ஏற்பட்டுள்ளது.

 

அதே போல் பிரேக் பாயிண்ட் வெற்றிகளில் 6/16 என்று நடால் முன்னிலை வகிக்க பெடரர் 2/4 என்று பின்னடைவு கண்டார். அதாவது பெடரருக்கு பிரேக் வாய்ப்பு மிக அரிதாகவே ஏற்பட்டது என்றால் நடாலின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆனால் பெடரர் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் ரிஸ்க் காரணிகளின் அதிக விகிதத்துடன் ஆடியதால் 34 முறை அவரது ஷாட்கள் தவறாக முடிந்தது, ஆனால் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்து ஆடிய நடால் 19 முறைதான் தவறிழைத்தார். மொத்தமாக வென்ற புள்ளிகளில் இருவரது ஆட்டம் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும் நடால் மொத்தம் 102 புள்ளிகள் பெடரர் 79 புள்ளிகள்.

 

நடால் முதல் 3 கேம்களை வென்றார், பிறகு பெடரர் ஒரு பிரேக் செய்தார். மைதானத்தில் கடும் காற்று ஒரு புறத்தில் ஆடும்போது கடுமையான கடினப்பாடுகளை ஏற்படுத்தியது.  6வது கேம் மாரத்தானாக அமைய நடால் இறுதியில் வென்று முதல் செட்டில் 4-2 என்று முன்னிலை பெற்றார்.

 

பிறகு செட் பாயிண்ட் ஒன்றை நடாலுக்குச் சென்று விடாமல் பெடரர் காப்பாற்ற பெடரர் ரசிகர்களுக்கு ஆர்வம் மேலேறியது. ஆனால் நடால் ஒரு அரக்க பேக் ஹேண்ட் ஷாட்டில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

 

ஆனால் பெடரர் 2வது செட்டில் எழுச்சி பெற்று முதல் 2 சர்வ்கேம்களை வென்றார். ஆனால் நடால் ஒரு அருமையான சுழலும் ஃபோர் ஹேண்ட் ஷாட் மூலம் பெடரர் சர்வை பிரேக் செய்தார் நடால் பெடரர் நடாலை முறியடிக்க பிரமாதமான முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் நடால் அதற்கு அடிபணியாமல் எதிர்கொண்டு முறியடித்தார்.

இரண்டாவது செட்டின் கடைசியில் ஆட்டம் விறுவிறுப்பானது பெடரர் கடும் நெருக்கடி கொடுக்க தன் சர்வை போராடி வென்ற நடால் 4-4 என்று சமன் செய்தார். ஆனால் அதன் பிறகு 40-0 என்று பின் தங்கியிருந்தாலும் பெடரர் சர்வை பிரேக் செய்தார். பிறகு 2வது செட்டையும் வென்றார்.

 

3வது செட்டில் 3வது சர்வ் கேமில் பெடரர் ஒரு ஷாட்டை ஆட அது நெட்டில் பட்டு நடாலுக்கு வாகாக அமைய அது நடால் வெற்றியில் போய் முடிய பெடரர் கோபத்துடன் பந்தை ஸ்டேடியத்துக்குத் தூக்கி அடித்ததற்காக எச்சரிக்கப்பட்டார்.

 

பெடரரின் அடுத்த சர்வ் கேம்மை நடால் முறியடிக்க அத்தோடு பெடரர் எழுந்திருக்க வாய்ப்பில்லாமல் கடைசி செட்டை நடால் 6-2 என்று கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்