உலக சாதனை படைக்கப்பட்ட நாட்டிங்காம் டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடக் காத்திருக்கிறது இங்கிலாந்து அணி.
இந்த டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் படைக்கப்பட்ட இரு உலக சாதனைகளையும் இங்கிலாந்து அணிக்குச் சொந்தமானது. இந்திய நேரப்படி நாளை நண்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 103 ரன்களில் சுருண்டு தனது முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில் இரண்டாவது ஆட்டத்தில் நாளை மோதுகிறது.
இங்கிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 100 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இருப்பை வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
இதுவரை இரு அணிகளும் கடந்த 1974-ம் ஆண்டில் இருந்து 87 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் பாகிஸ்தான் 31 போட்டிகளில் வெற்றியும், இங்கிலாந்து 53 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.3 போட்டிகளில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக்கொள்வதற்கு இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். ஏன் இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்றால், தற்போது ரவுண்ட் ராபின் முறையில் உலகக் கோப்பைப் போட்டி நடக்கிறது.
இதில் தொடக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றால் மட்டும் அடுத்துவரும் போட்டிகளில் நெருக்கடி இல்லாமல் ஆட முடியும் இல்லாவிட்டால், ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் அணிகளுக்கு நேர்ந்த நெருக்கடி நிலையும், ரன்ரேட் அடிப்படையில் ஒப்பீடு செய்வதும்தான் நடக்கும். அதனால்தான் இங்கிலாந்து அணி துணிந்து அடித்து ஆடி வெற்றியை உறுதி செய்து வருகிறது.
இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில், இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா போட்டி மட்டும்தான் 300 ரன்களுக்கும் மேல் சென்றது. மற்ற போட்டிகளில் பாகிஸ்தான் -மே.இ.தீவுகள் நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸி. ஆகிய போட்டிகள் 200 ரன்களுக்குள்ளாகவே முடிந்துவிட்டன.
ஏனென்றால், ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக அமைக்கப்பட்டு இருந்தன. ஆடுகளத்தில் நிலைத்தன்மையுடன் பேட்ஸ்மேன்கள் பேட் செய்யாததாலும் ஸ்கோர் உயரவில்லை. இதனால் இந்த உலகக்கோப்பை இன்னும் ரசிகர்கள் மத்தியில் எழுச்சி பெறவில்லை.
ஆனால், நாட்டிங்காமில் நடைபெறும் பாகிஸ்தான் - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டியை உலக சாதனை நிகழ்த்தப்பட்ட அதே பிட்சில் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்தது இந்த ஆடுகளத்தில்தான். அந்த போட்டியில் ஹேல்ஸ், பேர்ஸ்டோ சதம்அடித்தார்கள். 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இதே பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது. இதே பிட்சில்தான் 2016-ல் இங்கிலாந்து 444/3 என்று விளாசியது நினைவிருக்கலாம்.
அன்று பாகிஸ்தானை மே.இ.தீவுகள் பவுன்ஸ் அவுட் செய்து 105 ரன்களுக்குச் சுருட்டிய பிட்சிற்கு 2 பிட்ச்கள் தள்ளியிருக்கும் பிட்சை இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டிக்குப் பயன் படுத்தி ரசிகர்களைக் குஷிப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி 300 ரன்களுக்கு மேல் அடித்தும் பாகிஸ்தான் தோல்வி கண்டது. ஆதலால் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் அறிந்துதான் இங்கிலாந்து நாளை மோதுகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும் எந்த வீரர்களும் நிலைத்தன்மையுடன் பேட்டிங் செய்யவில்லை.
பாபர் ஆசம், இமாம் உல் ஹக், சர்பிராஸ் அகமது, ஹசன் அலி, பக்கர் ஜமான், சோயிப் மாலிக் என பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் களத்தில் நின்று விளையாடாதது மிகப்பெரிய பின்னடைவாகும். இதில் பாபர் ஆசம், இமாம் உல் ஹக், பக்கர் ஜமான் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்கள் இவர்களை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நிற்கவிட்டால் ஸ்கோர் 300 ரன்களை தாண்டுவதில் எந்த மாற்றமும் இல்லை.
பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் இங்கிலாந்தைக் காட்டிலும் வெகுதொலைவில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. பந்துவீச்சை பலப்படுத்த வரவழைக்கப்பட்ட வகாப் ரியாஸ், முகமது அமீர ஆகியோர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் பந்துவீசவில்லை. இந்த போட்டியில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் வீசுவது உத்தமம். ஆனாலும், முகமது அமீர், வகாப் ஆகியோரை அந்த அணி மிகவும் நம்பி இருக்கிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மிக உற்சாகமாக, நம்பிக்கையுடன் உலகக் கோப்பையை தொடங்கி இருக்கிறது. பந்துவீச்சில் பட்டையைக் களப்ப ஆர்ச்சர், உட், வோக்ஸ், பிளங்கட், ஸ்டோக்ஸ், டாம் கரன் என வேகப்பந்துவீ்ச்சுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். அனைவருமே விக்கெட் டேக்கர்கள் என்பது கூடுதல் அம்சம். அதிலும் ஆர்ச்சரின், மார்க் வுட்டின் பவுன்ஸரை சமாளிப்பது பாகிஸ்தானுக்கு சிறிது சிரமம்தான்.
சுழற்பந்துவீச்சில் அதில் ரஷித், மொயின் அலி இருவர் மட்டுமே இருந்தாலும் இருவரும் எதிரணிக்கு நெருக்கடி அளித்து விக்கெட்டை வீழ்த்தும் திறமை படைத்தவர்கள். அதிலும் ரஷித் பந்துவீச்சு 30 ஓவர்களுக்கு மேல் எதிரணியின் ரன் வேகத்தை மட்டுப்படுத்தும் வகையில் நெருக்கடியாக இருக்கும். அடித்து ஆடமுற்படும்போது விக்கெட்டெ இழப்பார்கள்.
பேட்டிங்கில் இங்கிலாந்து அணி அசுரபலத்துடன் இருக்கிறது. ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, பட்லர், மோர்கன், ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஆர்ச்சர் என வரிசையாக 8 வீரர்கள் வரை அணியை சரிவில் இருந்து தூக்கிநிறுத்த தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பேர்ஸ்டோ தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தாலும், அடுத்தடுத்துவந்த பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது. ஆதலால், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை குறைத்துமதிப்பிடமுடியாது.
ஆனால், இவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அமையுமா என்பதுதான் கேள்விக்குறி. நாளை போட்டியில் டாஸ் முக்கியப் பங்காற்றும். முதலில் பேட் செய்யும் அணி எதிர்பாரா ஸ்கோரை அடித்தாலும், அதை சேஸிங்கும் செய்தாலும் வியப்படையத் தேவையில்லை. நாளை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் போட்டியாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago