பவுன்சர்களுக்கு எதிரான நீண்டகால பேட்டிங் பிரச்சினைக்கு உஸ்மான் கவாஜாவை பலிகடாவாக்குகிறதா ஆஸ்திரேலியா?

By இரா.முத்துக்குமார்

எந்தக் காலத்திலுமே மே.இ.தீவுகளின் ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுமே பல விதங்களில் திணறியதுதான் வரலாறு, ஆனால் அன்று நடப்பு உலகக்கோப்பை போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் பவுன்சருக்குத் திக்கி திணறி ஆட்டமிழந்தது ஏதோ புதிய நிகழ்வு போன்று ஆஸ்திரேலியாவின் அணி நிர்வாகத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் கருதுவது ஏன் என்று தெரியவில்லை.

 

இந்நிலையில் வார்னர், பிஞ்ச், கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட அனைவருமே மே.இ.தீவுகளின் ஷார்ட் பிட்ச் உத்திக்கு ஏதோ ஒருவிதத்தில் கடுமையாகத் திணறியதையே பார்த்தோம்.

 

இந்நிலையில் உஸ்மான் கவாஜா மட்டும்தான் ஏதோ ஷார்ட் பிட்ச் பந்தில் அடி வாங்குவது போலவும் சிரமப்படுவது போலவும், அவர் இனி அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவரத் திறமையற்றவர் என்பது போலவும் கவாஜாவை பலிகடாவாக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்களும் இந்த திட்டத்துக்கு ஒத்து ஊதி வருகின்றன.

 

நடப்பு உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் ஆப்கானுக்கு எதிராக கவாஜா 15, மே.இ.தீவுகளுக்கு எதிராக 13 என்று சொதப்பினார், ஆனால் வார்னர், ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு தூண் போல் செயல்பட்டார், தொடக்கத்தில் இறங்குகிறார் 3ம் நிலையில் இறங்குகிறார், நன்றாகக் கேட்ச் பிடிப்பவர், கடினமான கேட்ச்களை விடாதவர், பீல்டிங்கிலும் குறையில்லை, மேலும் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் ஒருநாள் பேட்டிங்கைப் பொறுத்தவரை 53.13 என்ற சராசரியை வைத்திருப்பவரும் உஸ்மான் கவாஜாதான்.

 

2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக 53 ரன்கள் சராசரி வைத்திருக்கும் வீரருக்கு மாற்று தேடுவது என்பது ஒருவிதத்தில் கவாஜாவின் வம்சாவளிக்கு எதிராக ஏற்கெனவே இருக்கும் முன்முடிபாக (Prejudice)இருக்கும் என்ற ஐயமே எழுகிறது.

 

அன்று மே.இ.தீவுகளுக்கு எதிராக அவர் ஒரு பந்தில் அடி வாங்கினார், கொஞ்சம் தடுமாறினார், உடனேயே அடுத்த பவுன்சரை எதிர்பார்த்து கொஞ்சம் ஒதுங்கினார் கவாஜா, ஆனால் ரஸல் அவருக்கு ஒரு ஃபுல் லெந்த் பந்தை வீசினார். நிலையான இடத்தில் இல்லாமல் மட்டையை விட்டதால் எட்ஜ் ஆகி வெளியேறினார். சர்ச்சைக்குரிய வர்ணனையாளர் ஓ’கீஃப்  ‘நம்பர் 3 இடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை’ என்கிறார். வேகப்பந்து வீச்சில் அவரை குறுக்கி விட்டனர், இது போன்ற கிரிக்கெட்டை அவரே மீண்டும் பார்க்க விரும்ப மாட்டார் என்று அவர் கவாஜாவை விமர்சிக்கிறார்.

 

ரிக்கி பாண்டிங்கும், “கவாஜா கடந்த சிலவாரங்களில் கொஞ்சம் அதிகமாக அடி வாங்கியுள்ளார்” என்கிறார்.

 

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஷான் மார்ஷ் 2 சதங்களை அடித்ததோடு இந்த ஆண்டு 48.33 என்ற சராசரி வைத்துள்ளார், அவரி உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி மார்ஷ் லாபி கடும் விமர்சனங்களை முன் வைத்தது.  இந்நிலையில் கவாஜாவின் ஷார்ட் பிட்ச் பிரச்சினையை ஊதிப்பெருக்கி ஷான் மார்ஷை கொண்டு வர மார்ஷ் லாபி வேலை செய்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.  ஏனெனில் மேக்ஸ்வெல் திணறுகிறார் அவரைப்பற்றி இந்தக் கேள்வி ஆஸி. அணி நிர்வாகத்துக்கு எழவில்லை என்பதால் இதை ஏதோ உஸ்மான் கவாஜாவின் தனிப்பட்ட பிரச்சினையாக அணுகி அவரை அணியிலிருந்து நீக்கி பலிகடாவாக்க பார்க்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

 

இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டி இதனாலேயே கவாஜாவுக்கு பெரிய அக்னிப்பரிட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்