ஆசிய விளையாட்டு ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
இன்சியானில் இன்று நடைபெற்ற இரட்டையர் இறுதிப் போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய இந்திய இரட்டையர் ஜோடியான சாகேத் சாய் மைனேனி மற்றும் சனம் கிருஷண் சிங் ஆகியோர் 5-7, 6-7, என்ற செட் கணக்கில் தோல்வி தழுவினர்.
தென் கொரிய இரட்டையர் வீரர்களான லிம் யோங்க்யூ, சங் ஹையான் ஜோடி தங்கம் வென்றது.
தென்கொரிய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய தென்கொரிய வீரர்கள் 'டிராப் வாலி'-யில் சிறப்பாகத் திகழ்ந்தனர்.
2010ஆம் ஆண்டு குவாங்சூவில் நடைபெற்ற போட்டியில் சனம்-சோம்தேவ் தேவ் வர்மன் ஜோடி இரட்டையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை முதல் செட்டில் போராடி தோற்ற இந்திய ஜோடி, 2-வது செட்டில் ஆட்டத்தை சமன் முறிவுக் கட்டத்திற்கு நகர்த்தினர். அதற்கு முன்னர் 2வது செட்டில் 1-4 என்று பின் தங்கியிருந்தனர்.
சமன் முறிவு ஆட்டத்தில் 6-2 என்று கொரியா முன்னிலை வகிக்க லிம் சர்வை சனம் கிருஷண் ஃபோர் ஹேண்ட் ஷாட்டில் பந்தை வெளியே அடிக்க தோல்வி ஏற்பட்டது.
சானியா மிர்சா-மைனேனி ஜோடி இன்று கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் விளையாடுவதால் டென்னிஸில் தங்கப்பதக்க வாய்ப்பு இன்னும் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago