இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.
‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது.
நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத்தும் தவறான செய்திகள். Here you go... BOOM என்று உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.
சேத்தன் பகத் எழுதிய 'தி த்ரீ பிக் மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்' என்ற நாவலின் திரைவடிவத்தில் சுஷாந்த் நடித்திருந்தார். அதன் மூலம் அவரது புகழ் பரவத் தொடங்கியது. இதில் அவர் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார்.
இப்போது தோனியாக இவர் நடிக்கிறார் என்ற செய்திகளுக்குப் பிறகு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தோனி பற்றிய திரைப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சுஷாந்த் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிச் சீருடையில் 7 என்ற எண்ணுடனும், மட்டையுடனும், போஸ் கொடுத்துள்ளார்.
மில்கா சிங் மற்றும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய விளையாட்டு ஆளுமைகளின் வாழ்க்கையைக் கதைக் களமாகக் கொண்ட இந்தித் திரைப்படங்கள் ஹிட் ஆனதையடுத்து தற்போது தோனியின் தோள்களில் சாய்ந்துள்ளது பாலிவுட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago