டர்பன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக்குக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தையடுத்து, இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தண்டனையை வார்னர் ஏற்றுக்கொண்ட நிலையில், டீ காக் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
டர்பன் நகரில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் 4-வது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது, ஓய்வு அறைக்கு டீ காக் சென்றார். அப்போது, மாடிப்படியில் நின்று இருந்த ஆஸ்திரேலிய வார்னர் ஏதோ கூற, அதற்கு டீ காக் பதில் அளித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்த வீரர்கள் இருவரையும் பிரித்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் சார்பில் ஐசிசி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கண்காணிப்புக் கேமிரா காட்சியில் பதிவான ஆதாரங்களையும் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும், தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக், ஆஸி.வீரர் டேவிட் வார்னர் ஆகியோரிடம் போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில் இருவர் மீதும் தவறு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஐசிசி ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை குயின்டன் டீகாக், டேவிட் வார்னர் இருவரும் மீறியது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், டீமெரிட் புள்ளியும் தரப்பட்டது.
அதேசமயம், டீ காக்குக்கும் ஒரு ‘டீமெரிட்’புள்ளி தரப்பட்டது. ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து முறையீடு செய்துள்ளார். அது விசாரணைக்கு வர உள்ளது.
டேவிட் வார்னர் இதுவரை 3 டீமெரிட் புள்ளிகள்(மைனஸ்) பெற்றுள்ளார். இன்னும் ஒரு மைனஸ் புள்ளி பெற்றால், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஏற்கனவே 3 மைனஸ் புள்ளிகளை தென் ஆப்பிரிக்க வீரர் காசிகோ ரபாடா, டூபிளசி்ஸ் பெற்றுள்ளனர், அவர்களுடன் வார்னரும் இணைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago