களத்தில் காரசாரம்; வார்த்தைகளில் முட்டிக்கொண்ட வார்னர் டீ காக்: முதல் டெஸ்டில் ஆஸி.வெற்றி

By ஏஎஃப்பி

 

டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பரும் குயின்டன் டீக்காகும் வார்த்தைகளால் மோதிக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 351 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 189 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 293 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி நேற்று ஆட்டம் தொடங்கியவுடன் மீதமிருந்த ஒரு விக்கெட்டையும் அடுத்த 5 ரன்களில் இழந்தது. இதையடுத்து 298 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மார்க்ரம் 143 ரன்களும், டீ காக் 83 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேசல்வூட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டீகாக், வார்னர் மோதல்:

இதற்கிடையே 4-ம் நாள் ஆட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஓய்வு அறைக்கு டீகாக் படியேறி வரும்போது, வழியில் நின்று இருந்த வார்னர் ஏதோ கூறி, அவரிடம் வம்பு செய்கிறார். அதற்கு பதிலுக்கு டீகாக்கும் பேசுகிறார். இதனால், ஆத்திரமடைந்த வார்னர், டீகாக் மீது பாய்கிறார், இதை அருகில் இருந்த வீரர்கள் தடுத்தும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சி இப்போது வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மார்க்ரம், டீகாக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால், வெற்றி ஆஸ்திரேலியாவில் பக்கத்தில் இருந்து சென்றுவிடும் சூழலில் இருந்தது. மேலும், டீகாக்கின் பேட்டிங் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எரிச்சல் அடையும் விதத்தில் நிதானமாக இருந்து விக்கெட் வீழ்வதை தடுத்து நிறுத்தியது. இதனால், களத்தில் வார்னர் ஆவேசமாக காணப்பட்டார். இந்த சூழலில் இந்த மோதல் ஏற்பட்டது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘ டீகாக், வார்னர் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் அறிந்தோம். அந்த மோதலில் உண்மையான விவரங்கள், என்ன நடந்தது குறித்து விசாரித்து வருகிறோம். அதன்பின் நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்க வீரர் டீவில்லியர்ஸ் ரன் ஆவுட் ஆன போது, அவரைக் கிண்டல் செய்யும் வகையில் வார்னர் நடந்து கொண்டார். அப்போது, மார்க்ரம் இடையே மோதல் ஏற்பட இருந்து தடுக்கப்பட்டது.

இந்த இரு சம்பவங்களையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடப்பது துரதிருஷ்டமானது. கிரிக்கெட்டின் மகத்துவத்தை கெடுத்துவிடும் எனத் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் வார்னரின் செயல்பாடுகளை கண்டித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்