தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

By கே.டி.ஜெகன்னாதன்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனி நிறுவனமாக மாற்றவுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம்.

"சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது.

தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சந்தைகளிலும் நுழைந்து புறப்பட முடிந்துள்ளது. காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் இந்தியாவில் வீடுதோறும் புழங்கும் ஒரு பெயராக மாறிவிட்டதே.

2008ஆம் ஆண்டு சென்னை அணிக்காக இந்தியா சிமெண்ட்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்தது. 91 மில்லியன் டாலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்தது. இந்தத் தொகையை 10 ஆண்டுகள் காலக்கட்டத்தில் செலுத்த வேண்டும்.

2013-14ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் ரூ.166 கோடி.

2013ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ், சி.எஸ்.கே. சூப்பர் கோப்பை என்ற பல்துறை விளையாட்டுப் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இது கார்ப்பரேட்டுகளுக்கு இடையிலான விளையாடுத் தொடர் ஆகும். இதில் செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஸ்னூக்கர் ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்