ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்குவது முதலாவது அல்ல, 5-வது முறையாகும்.
தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அந்த அணி வீரர்களிடம் தொடர்ந்து வம்பு செய்வதும், அவர்களை சீண்டுவதும் வாடிக்கையாக ஆஸ்திரேலிய வீரர்கள் வைத்திருந்தனர்.
இதனால், முதலில் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அதன்பின் களத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஸ்மித்தின் தோள்பட்டையை இடித்ததால் 2 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கப்பட்டது. இதனால், 3-வது போட்டி மிகுந்த பரபரப்பாகி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 3-வது டெஸ்ட்டின் 3-வது நாள் ஆட்டத்தில் ஜூனியர் வீரர் கேமரூன் பேன்கிராப்ட் மூலம் பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை செய்து அதில் ஸ்மித் சிக்கிக்கொண்டார். திட்மிட்டு, தெரிந்தே செய்த இந்த தவறு மூலம் தனது கேப்டன் பொறுப்பை ஸ்மித் இழந்துள்ளார்.
இதுபோன்ற சர்ச்சையில் ஸ்மித் சிக்குவது முதல்முறை அல்ல இது5-முறையாகும். இதற்கு முன்பும் பல சிக்கல்களில் ஸ்மித் சிக்கியுள்ளார்.
டிஆர்எஸ் முறை விமர்சனம்
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இதில் பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, எல்பிடபில்யு முடிவுக்கு டிஆர்எஸ் முறையை விராட் கோலி கோரினார். அதற்கு மூளையை மழுங்கடிக்கச் செய்யும் முறை என விமர்சனம் செய்து ஸ்மித் சர்ச்சையில் சிக்கினார்.
இங்கிலாந்து வீரருடன் வம்பு
ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டாக இருக்கும். கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அவரை சீண்டிவிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின், அங்கிருந்த நடுவர் ஆலீம் தார் தலையிட்டு இருவரையும் விலக்கிவைத்தார்.
நடுவருடன் வாக்குவாதம்
கடந்த 2016ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, நடுவருடன் ஆஸ்திரேலிய கேப்டன் மிகவும் சத்தமாக, அசிங்கமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவரின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ரபாடாவுடன் உரசல்
தென் ஆபிரிக்காவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2-வது டெஸ்ட் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவுக்கு முகத்துக்கு நேரே சென்று புருவத்தை உயர்த்தி கிண்டல் செய்தார். இதனால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு,ஸ்மித்தின் தோள்பட்டையில் ரபடா இடித்துச் சென்றார். இதற்கு ரபாடாவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பந்துக்கு சேதம்
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, வேண்டுமென்றே திட்டமிட்டு, பந்தை சேதப்படுத்த, தனது ஜூனியர் வீரர் கேமரூன் பேன்கிராப்டை ஸ்மித் பயன்படுத்தியுள்ளார். தான் பந்ததை சேதப்படுத்தாமல், கேமரூன் மூலம் சேதப்படுத்தியதை ஸ்மித் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியை இழந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago