ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி இன்று தனது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் கொரிய அணியை எதிர்கொள்கிறது.
தென் கொரியா இப்போட்டியில் பங்கேற்றுள்ள வலுவான அணி, மேலும் அவர்கள் சொந்த மண்ணில் களமிறங்குவதும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.
இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1998-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது. அப்போது இறுதி ஆட்டத்தில் தென் கொரிய அணியைதான் இந்தியா வென்றது. எனவே இப்போது நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லீக் ஆட்டத்தில் முதல் 3 ஆட்டங்களில் இந்தியா கோல் எதையும் வாங்கவில்லை. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8–0 என்ற கணக்கில் இலங்கையையும், 2-வது லீக் ஆட்டத்தில் 7–0 என்ற கணக்கில் ஓமனையும், 3-வது லீக் ஆட்டத்தில் 2–0 என்ற கணக்கில் சீனாவையும் வீழ்த்தியது. எனினும் தனது இறுதி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 1–2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
தென் கொரியா அனைத்து லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளது. எனவே அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்த இந்தியா கடுமையாக போராட வேண்டியிருக்கும். மற்றொரு அரையிறுதி பாகிஸ்தான்– மலேசியா அணிகள் மோதுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago