துணை ஆட்சியரானார் கிடாம்பி ஸ்ரீகாந்த்: பணி நியமன உத்தரவு வழங்கினார் சந்திரபாபு நாயுடு

By என்.மகேஷ் குமார்

பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு நேற்று அமரா வதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை ஆட்சியருக்கான பணி நியமன உத்தரவை வழங்கி சிறப்பித்தார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். இவர், கடந்த ஆண்டு, இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்றார். மேலும் இவருக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டத்தையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், நேற்று அமராவதியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும், அவருடைய பயிற்சியாளர் கோபிசந்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றமைக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்ரீகாந்தை பாராட்டினார். இதனை தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பில், துணை ஆட்சியருக்கான பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு அவரிடம் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்