பிசிசிஐ ஏஜிஎம்மை நடத்தக் கோரி வர்மா கடிதம்

பிசிசிஐ விதிமுறைப்படி அதன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்) இந்த மாதமே நடத்த வேண்டும் என பிசிசிஐ இடைக்கால தலைவர் சிவலால் யாதவை வலியுறுத்தியுள்ளார் ஐபிஎல் சூதாட்ட வழக்கின் மனுதாரரான ஆதித்ய வர்மா.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முகுல் முத்கல் கமிட்டி விசாரணையை முடிப்பதற்கு மேலும் இரண்டு மாத காலஅவகாசம் பெற்றுள்ள நிலையில், ஆதித்ய வர்மா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிசிசிஐயின் ஒரு சில நிர்வாகிகள் பிசிசிஐ ஏஜிஎம்மை காலவரையறையின்றி ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்திலிருந்து சீனிவாசனுக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை ஏஜிஎம்மை ஒத்திவைக்க சதி நடக்கிறது. இது உண்மையாக இருக்குமானால் ஜனநாயக விரோத செயல் மட்டுமின்றி, கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தானதாக அமையும். பிசிசிஐ ஏஜிஎம்மை வரும் 30-ம் தேதிக்குள் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE