வார்னர் மனைவியின் அந்தரங்கத்தை கேலி செய்த ரசிகர்களுடன் புகைப்படம்: தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு

By ராய்ட்டர்ஸ்

டர்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸி.-தெ.ஆ மோதிய போது வார்னருக்கும், டிக்காக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது கிரிக்கெட் ஆட்டத்தின் கண்ணியத்துக்கு எதிரானது என்று இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் வார்னருக்கு எச்சரிக்கை விடுத்தது, இயன் சாப்பல் போன்ற முன்னாள் வீரர்கள் வார்னரை மட்டும் தடை செய்தால் போதாது, பயிற்சியாளர் டேரன் லீ மேன், கேப்டன் ஸ்மித் ஆகியோரையும் தடை செய்து கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இத்தகைய அசிங்கமான நடத்தைகள் குறையும் என்று கூறியிருந்ததும் குறிப்ப்பிடத்தக்கது.

இந்நிலையில் வார்னர், குவிண்டன் டி காக் தன் மனைவி பற்றி அவதூறு செய்தார் என்று கூறியதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குவிண்டன் டி காக் என்ன அவதூறாகக் கூறினார் என்று வெளிவராத நிலையில், வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னருக்கும் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு உறவை அவதூறு செய்யும் விதமாக சோனி பில் வில்லியம்சின் முகமூடியை அணிந்து சில ரசிகர்கள் போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் போஸ் கொடுக்க அவர்களுடன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு போஸ் கொடுத்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

மேலும் இந்த மாஸ்க்கை அணிந்து கொண்டு அவர்கள் கேலி செய்த போது 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தைப் பார்க்க தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார் வார்னரின் மனைவி.

2007-ல் சிட்னி மதுபான விடுதியில் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்சுக்கும் வார்னர் மனைவிக்கும் இடையே நடந்த ஒரு பாலியல் விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக வார்னரை வெறுப்பேற்ற இத்தகைய கீழ்த்தரமான ஒரு செயலைச் செய்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன் அதிகாரிகள் செயலுக்கும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் செயலுக்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைவர் கிரிஸ் நென்ஸானி கூறும்போது, “ கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா சார்பாக நான் உண்மையாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அதன் அதிகாரிகள், அதன் நிர்வாகம், வீரர்கள், அவர்கள் குடும்பங்கள், ஆகியோரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா இத்தகைய செயல்களுடன் உடன்படவில்லை. ரசிகர்களும் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கக் கூடாது.

இதைத்தான் குவிண்டன் டி காக்கும் வார்னருக்கு எதிராகக் கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்