லாகூர் லயன்ஸ் தோற்று வெளியேற்றம்; அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

By செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் அணி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லாகூர் லயன்ஸ் அணி வெற்றி பெற்றேயாக வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே லாகூர் லயன்ஸ் எடுத்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 19 ஓவர்களில் 130/7 என்று வெற்றி பெற்றது.

லாகூர் லயன்ஸ் அணி இந்தப் போட்டியில் வெறும் வெற்றி பெற்றால் மட்டுமே போதாத நிலை இருந்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை 78 ரன்களுக்குள் மடக்க வேண்டிய நிலை இருந்தது.

124 ரன்களை வைத்து கொண்டு லாகூர் லயன்ஸ் அணி சிறப்பாக போராடியது, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் 13 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 62/7 என்று சரியும் அபாயத்தில் இருந்தது.

ஆனால் மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுக்க, பிராட் ஹாக் 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிச்கர்களுடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க லாகூர் லயன்ஸ் விதி முடிந்தது.

லாகூர் லயன்ஸ் பேட்டிங் அபத்தமாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே நசீர் ஜாம்ஷெட் மற்றும் உமர் சித்திக் விக்கெட்டுகளை பறிகொடுக்க மொகமது ஹபீஸ் ரன் எடுக்காமல் 2வது ஓவரில் மிட்செல் மார்ஷிடம் ஆட்டமிழக்க 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகள் பறி போனது. போதாக்குறைக்கு 4வது ஓவரில் மிட்செல் மார்ஷிடம் வஹாப் ரியாஸும் ஆட்டமிழக்க 11/4 என்று சரிவு கண்டது.

அதன் பிறகு சாத் நசீம், உமர் அக்மல் இணைந்து ஸ்கோரை 10வது ஓவரில் 54 ஆக உயர்த்தினர். உமர் அக்மல் 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஹாக் பந்தில் அவுட் ஆனார். மொகமது சயீதும், சாத் நசீமும் இணைந்து அடுத்த 8 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்க ஸ்கோர் 102ஆக உயர்ந்தது.

சாத் நசீம் 55 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிச்கருடன் 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். லாகூர் லயன்ஸ் 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பாரிஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், ஹாக் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் சிம்மன்சை, ஹபீஸ் முதல் ஓவரிலேயே சாய்த்தார். ஆனால் அந்த மட்டை/பேடு கேட்ச் நாட் அவுட். எட்ஜ் ஆகவில்லை. நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் புதிய பேட்ஸ்மெனுக்கு அடுத்த பந்தே எட்ஜ் ஆனது அதனை நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 13வது ஓவரில் 62/7 என்று ஆனது பெர்த். ஆனால் 14வது ஓவரிலேயே பிராட் ஹாக் 14 ரன்களை விளாச ஆட்டம் மாறிப்போனது.

அதன் பிறகு சிலபல அவுட் முறையீடுகள் மறுக்கப்பட்டன. மிட்செல் மார்ஷ் ஆட்டம் சூடுபிடிக்க, பிராட் ஹாக் உதவியுடன் மேலும் விக்கெட்டுகள் விழாமலேயே பெர்த் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்