தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை நீக்கக் கோரி பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் விசாரணை முடியும் வரை ஸ்டீவன் ஸ்மித் 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக தொடரலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் தெளிவாகப் பதிவானது.
இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது அதற்கு விளக்கம் அளித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்தார். அப்போது தனது அணி வீரர் கேமரூன் பேன்கிராப்ட் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து, இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கவுரவத்தை குலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தெளிவான அறிக்கையும் அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது.
அடுத்த இருநாட்கள் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும். அதுவரை கேப்டன் பதவியில் ஸ்மித் நீடிப்பார். இந்த விவகாரம் தொடப்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இயான் ராய், அணியின் திறன்மேம்பாட்டு தலைவர் பாட் ஹோவார்ட் உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்துவார்கள்.
இன்னும் கேப்டன் ஸ்மித்திடம் பேசவில்லை. ஆனால், இந்த விவகாரம் தன்னை மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மிகுந்த ஒழுக்கத்துடன், பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago