ஒருநாள் கிரிக்கெட்டை முறையாக நடத்த வேண்டும்: ராகுல் திராவிட் வலியுறுத்தல்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி இப்போது பலவீனமான நிலை யிலும், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடும் நிலையிலும் உள்ளது. எனவே அதனை முறைப்படி நடத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 6-வது திலீப் சர்தேசாய் நினைவு தின நிகழ்ச்சியில் கிரிக்கெட் தொடர்பாக அவர் பேசியது:

சரியான மைதானங்களில் முறைப்படி நடத்தாத காரணத்தால் ஒருநாள் போட்டிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை கிரிக்கெட் போல ஒருநாள் போட்டிகளை நடத்த வேண்டும்.

எதுவுமே அளவுக்கு அதிகமாகி விட்டால் அது நன்மையளிப்பதாக இருக்காது. இதுபோலதான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும். இரண் டுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற் கும் ஒருநாள் போட்டித் தொடர்கள் நடத்தப்படுவது பெருமளவில் குறைந்துவிட்டது என்றார்.

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு ஐசிசி தடை விதித்திருப்பது குறித்து பேசிய திராவிட், பந்தை சுண்டி வீசுவது என்பது பெரிய குற்றமல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனினும் ஐசிசி-க்கு என்று விதி உள்ளது. அவை கூறும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும். பந்து வீசும்போது 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம் என்பது விதி. மெக்ராத் கூட தனது முழங்கையை மடக்கிதான் பந்து வீசுவார். ஆனால் அது 15 டிகிரிக்கு உள்பட்டதாக இருந்தது. எனினும் இப்போது நவீன தொழில்நுட்பங்கள் தவறை சரியாக கண்டறிந்து அவற்றை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அஜ்மல் பந்து வீச்சில் 2009-ம் ஆண்டில் ஏற்கெனவே ஒருமுறை சந்தேகம் ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டது. இப்போது மீண்டும் அவரது பந்து வீச்சு தடை செய்யப்பட்டுள்ளது. அவர் சற்று கவனத்துடன் பந்து வீச வேண்டும் என்றார்.

இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து நமது வெளிநாட்டு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது மனைவி, காதலிகளை தங்களுடன் அழைத்து வருவது குறித்து கேள்வி எழுந்தது. முக்கியமாக விராட் கோலி, தனது தோழியான நடிகை அனுஷ்கா சர்மாவை அழைத்து வந்ததால்தான் அவரால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது என்று குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த திராவிட். “ஆண்டில் 10 முதல் 11 மாதங்கள் வரை நமது அணியினர் கிரிக்கெட் விளை யாடி வருகின்றனர். எனவே மனைவி அல்லது காதலியை உடன் அழைத்துச் செல்ல அனு மதிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் மனைவி, காதலியை குறை கூறுவது சரியாக இருக்காது.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடிலெய்ட் மைதானத்தில் எடுத்த இரட்டை சதத்தையும், இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எனது ரன்களையும் முக்கியமானதாக கருதுகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE