ஐபிஎல் சூதாட்டம் முத்கல் கமிட்டிக்கு 2 மாதம் அவகாசம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார்கள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி முத்கல் கமிட்டிக்கு மேலும் 2 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். ஐபிஎல் சூதாட்டம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்டு 2 மாதத்தில் இறுதி விசாரணை அளிக்க வேண்டுமென்று முத்கல் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்போது ஐசிசி தலைவராக உள்ளவரும், நீதிமன்றத்தால் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டவருமான என்.சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் உள்பட 13 பேருக்கு ஐபிஎல் சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங் முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து முத்கல் கமிட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சீனிவாசனின் கோரிக்கை நிராகரிப்பு

பிசிசிஐ தலைவர் பதவியில் செயல்பட தன்னை அனுமதிக்க வேண்டுமென்ற சீனிவாசனின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனின் பெயர் இடம் பெறாமல் இருந்தால் மட்டுமே அவரை மீண்டும் பிசிசிஐ தலைவராக செயல்பட அனுமதிக்க முடியும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE