மட்டையை சுழற்ற காத்திருக்கும் வலுவான ஹிட்டர்கள்

By பெ.மாரிமுத்து

வெப்பமான காலநிலை, உலர்ந்த ஆடுகளங்கள் ஆகியவற்றால் இம்முறை இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகளவில் ‘ரன் வேட்டை’ நிகழ்த்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் உள்ள வலுவான ஹிட்டர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அது பற்றிய ஓர் அலசல்..

ஜாஸ் பட்லர்: இங்கிலாந்து

நடுவரிசை வீரராக களமிறங்கும் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இறுதிகட்ட ஓவர்களில் சமீபகாலமாக அபாயகரமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஜாஸ் பட்லரின் ஸ்டிரைக் ரேட் 181.2 ஆக உள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 50 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியிருந்தார் ஜாஸ் பட்லர். இங்கிலாந்து அணிக்காக இரு முறை அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ள ஜாஸ் பட்லர், 360 டிகிரி கோணத்தில் மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை விளாசும் திறன் கொண்டவர். இதனால் இந்த உலகக் கோப்பை தொடரில் எதிரணியின் பந்து வீச்சார்களுக்கு ஜாஸ் பட்லர் கடும் சோதனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆட்டம் 130

ரன் 3,497

ஸ்டிரைக் ரேட் 119.80

பவுண்டரி 295

சிக்ஸர் 116

ஹர்திக் பாண்டியா: இந்தியா

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நடு ஓவர்களில் முக்கியமான தருணங்களில் விக்கெட்கள் கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர் மட்டும் இல்லாமல் எந்தவிதமான ஆடுகளத்திலும் மட்டையை சுழற்றும் திறன் கொண்டவர். இலக்கை துரத்திய ஆட்டங்களில் அதிக முறை ஹர்திக் பாண்டியா வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 46 பந்துகளில் 76 ரன்கள் விளாசியது, சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தது ஆகியவை சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.

 சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். இந்தத் தொடரில் 28 சிக்ஸர்கள் விளாசிய அவர், 16 ஆட்டங்களில் 402 ரன்களை குவித்திருந்தார். ஒரு சில ஆட்டங்களில் அவர், தோனியை போன்றே ஹெலிகாப்டர் ஷாட் விளையாடியது வெகுவாக கவர்ந்தது.

ஆட்டம் 45

ரன் 731

ஸ்டிரைக் ரேட் 116.58

பவுண்டரி 48

சிக்ஸர் 36

டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியா

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்குப்  பிறகு அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் வகையில் பெரிய அளவிலான இன்னிங்ஸ்களை விளையாட முயற்சிக்கக்கூடும். ஐபில் தொடரில் 12 ஆட்டங்களில் 692 ரன்கள் வேட்டையாடியிருந்த அவர், உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் முக்கிய பங்காற்றக்கூடும்.

ஆட்டம் 52

ரன் 998

ஸ்டிரைக் ரேட் 130.45

பவுண்டரி 91

சிக்ஸர் 54

ஆந்த்ரே ரஸ்ஸல்: மேற்கிந்தியத் தீவுகள்

சமகால வீரர்களில் அதிக வலுவுடன் பந்தை விளாசக்கூடிய முக்கியமான வீரராக கருதப்படுபவர் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல். பந்தை நீண்ட தூரம் விளாசக்கூடிய திறன் படைத்த ரஸ்ஸல், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், தனியொரு பேட்ஸ்மேனாக பல்வேறு ஆட்டங்களில் கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.

இந்த சீசனில் அவர், 14 ஆட்டங்களில் ஸ்டிரைக் ரேட் 204 உடன் 510 ரன்களை வேட்டையாடியிருந்தார். இதில் 54 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் உலகக் கோப்பை தொடரில் ரஸ்ஸலின் பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

ஆட்டம் 52

ரன் 998

சிக்ஸர் 54

பவுண்டரி 91

ஸ்டிரைக் ரேட் 130.45

டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க வீரரான டேவிட் மில்லர்சமீப காலமாக சிறந்த பார்மில் இல்லை.

எனினும் போட்டியின் தினம் அவருக்கான தாக அமையும் பட்சத்தில் எதிரணியின் பந்து வீச்சாளர்களை நிச்சயம் பதம்பார்த்து விடுவார். தென் ஆப்பிரிக்க வீரர்களில் விதிவிலக்காக வேகப்பந்து வீச்சில் சற்று தடுமாறும் டேவிட் மில்லர், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பெரிய அளவில் ரன்கள் சேர்க்கும் திறன் கொண்டவர்.

ஆட்டம் 120

ரன் 2,922

ஸ்டிரைக் ரேட் 100.86

பவுண்டரி 219

சிக்ஸர் 82

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்