ஐசிசி உலகக்கோப்பைகள்: மறக்க முடியாத 5 தருணங்கள்

By ஏஎஃப்பி

கிரிக்கெட் உலகக்கோப்பை அதன் 44 ஆண்டுகால வரலாற்றில் பல மறக்க முடியாத போட்டிகளையும் தருணங்களையும் அளித்துள்ளது. இதில் முக்கிய 5 தருணங்களைப் பார்ப்போம்.

 

1975: கேரி கில்மரின் மகாப்பெரிய நாள்:

 

1975 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவில் டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ஆகிய பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களின் அச்சுறுத்தல்களை இங்கிலாந்து நன்கு அறிந்திருந்தது.

 

ஆனால் இங்கிலாந்துக்கு அன்றைய தினம் ஆப்பு வைத்தது இடது கை ஆஸி. ஸ்விங் பவுலர் கேரி கில்மர். அப்போது கில்மருக்கு வயது 23. இவர் அபாரமான ஸ்விங் பவுலிங்கில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து 93 ரன்களுக்குச் சுருண்டது.

 

ஆனால் ஸ்விங்கிற்கு ஆஸ்திரேலியாவும் இரையாகி 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஓல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஆனால் பேட்டிங்கிலும் கில்மர் அசத்தினார். கில்மர் 28 ரன்களை எடுத்து டக் வால்டர்ஸுடன் இணைந்து வெற்றியை உறுதி செய்ய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் நுழைந்தது.

 

1983: வீடியோ பதிவில்லாத கபிலின் ‘175 நாட் அவுட்’:

 

இங்கிலாந்தின் எதிர்கால பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் ஆல்ரவுண்ட் திறமையினால் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்த ஜிம்பாப்வே, டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை 17/5 என்று குறுக்கியது.

 

ஆனால் அதன் பிறகு நடந்தது ஜிம்பாப்வேவுக்கும் பிளைண்டர், கபிலுகும் பிளைண்டர்தன், 138 பந்துகளில் 17 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 175 ரன்கள் நாட் அவுட் என்றார் கபில்தேவ். தனி மனிதனாக புரட்டி எடுத்த இந்த இன்னிங்ஸ் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. காரணம் பிபிசி தொழில்நுட்ப பணியாளர்கள் அன்று ஸ்ட்ரைக். தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டியை பார்க்க முடியவில்லை.

 

இந்திய அணி 266 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே 233 ரன்கள் வரை வந்து தோற்றது. இந்த ஆட்டம்தான் இந்திய கிரிக்கெட்டுக்கே திருப்பு முனை இன்னிங்ஸ், இதன் பிறகு கோப்பையை வென்று ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று பெயர் எடுத்தது இன்னொரு சுவாரசியமான கதை.

 

1999: தென் ஆப்பிரிக்காவுக்கு ‘சோக்கர்ஸ்’ என்ற அடைமொழி கிடைத்த ‘டை’ மேட்ச்:

 

1999 உலகக்கோப்பையில் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற அரையிறுதியில் ஆஸ்திரேலியா 213 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஷான் போலக் 5 விக்கெட்டுகளை 36 ரன்களுக்குக் கைப்பற்றி அசத்தினார்.

 

இந்தப் போட்டியில் நன்றாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த திருப்பு முனையை ஷேன் வார்ன் அளிக்க அந்த அணி பிறகு ஜாக் காலிச், ஜாண்ட்டி ரோட்ஸ் மூலம் இலக்கை நெருங்க முயற்சி செய்ய லான்ஸ் குளூஸ்னர் ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்காவை இட்டுச் சென்றிருப்பார்.

 

ஆனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்பது ஒரு பந்து ஒரு ரன் என்பதாக மாறியது.  இருப்பதும் ஒரு விக்கெட்தான், குளூஸ்னர், ஆலன் டொனால்டு களத்தில் இருந்தனர். குளூஸ்னர் பந்தை மிட் ஆஃபுக்கு அடிக்க கடும் சப்தத்தில் குளூஸ்னர் அழைப்பை ரன்னர் முனையில் இருந்த டொனால்ட் கேட்கவில்லை. மட்டையையும் கீழே விட்டார். மார்க் வாஹ் பந்தை பீல்ட் செய்து பவுலர் டேமியன் பிளெமிங்கிடம் கொடுக்க அவர் பந்தை விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்டுக்கு உருட்ட கில்கிறிஸ்ட் ரன் அவுட் செய்தார்.  கடைசி நேரத்தில் பிட்சைச் சுற்றி ஒரே மஞ்சள் சீருடை. பச்சை சீருடை வெளியேறியது, மிகவும் துக்ககர அங்கதமாக நிகழ்ந்த ரன் அவுட் ஆகும். ஆட்டம் டை ஆனது, இதனால் ஆஸ்திரேலியா இறுதிக்கு முன்னேறி கோப்பையை வென்றது. இறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது.

 

kevinjpg2011: 327 ரன்கள் அடித்தும் அயர்லாந்தின் கெவினோ பிரையன் காட்டடியில் இழந்த இங்கிலாந்து:

 

உலகக்கோப்பையில் இதற்கு முன் எந்த் அணியும் 327 ரன்கள் இலக்கை விரட்டியதில்லை, அன்று இங்கிலாந்தின் இத்தகைய இமாலய இலக்கை டெஸ்ட் ஆடாத அணியான் அயர்லாந்து வெற்றிகரமாக விரட்டி அதிர்ச்சியளித்தது.

 

அயர்லாந்தின் கெவினோ பிரையன் சற்றும் எதிர்பாரா விதமாக ஒரு கபில் தேவ், ஷாகித் அஃப்ரீடி இன்னிங்ஸை ஆடி 50 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் உலகக்கோப்பை அதிவேக சதச் சாதனையை நிகழ்த்தினார்.  111/5 என்று சரிந்திருந்த அயர்லாந்து கெவினோ பிரையனின் இந்தக் காட்டடியினால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 

2015: தென் ஆப்பிரிக்காவின் இருதயத்தை நொறுக்கிய நியூஸி. வெற்றி

 

ஃபாப் டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ் அரைசதங்களுடன் தென் ஆப்பிரிக்கா 43 ஓவர்களில் 281/5 என்ற ஸ்கோரை எட்டியது. மழையால் ஓவர்கள் குறைந்ததால் நியூஸிலாந்துக்கு இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது.

 

தென் ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்கில் பிறந்து வளர்ந்த கிராண்ட் எலியட் என்ற வீரர் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஆப்பு வைத்தார்.

 

நியூஸிலாந்துக்குத் தேவை 2 பந்துகளில் 5 ரன்கள். ஆனால் டேல்ஸ்டெய்ன் பந்தை மிட் ஆன் மேல் ஒரே தூக்குத் தூக்கி சிக்சருக்கு அனுப்பினார் கிராண்ட் எலியட் அதோடு தென் ஆப்பிரிக்காவையும் மைதானத்தை விட்டு அனுப்பினார். தென் ஆப்பிரிக்காவின் ஒரு கடைசி முயற்சியையும் முறியடித்தார் கிராண்ட் எலியட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்