இன்று சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது ஹைதராபாத்: மற்றொரு ஆட்டத்தில் மும்பை - டெல்லி மோதல்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சார்ஜாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து 3 போட்டிகளில் வென்றுள்ள சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியில் விளையாடுவர். அதே நேரத்தில் 3 போட்டிகளில் விளையாடி கடைசி போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணியும் வெற்றிப் பாதையை தக்கவைத்துக் கொள்ள போராடும்.

சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் மெக்கல்லம், டுவைன் ஸ்மித் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரெய்னா, டு பெலிஸ்ஸிஸ், தோனி, ஆல்ரவுண்டர்கள் மிதுன் மன்ஹாஸ், ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசையை சூப்பர் கிங்ஸ் கொண்டுள்ளது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் மோஹித் சர்மா, ஹில்பெனாஸ் ஆகியோர் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். அஸ்வினும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான தனது 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஸ்டெயின், சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு இரண்டாவது ஆட்டமாக நடைபெறவுள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், டெல்லி அணியை எதிர்கொள்கிறது. 3 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. டெல்லி அணி 4 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்