சவுத்தாம்டன் நகரில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் சரிக்கு சரியாக மோதிக்கொண்டன.
ஒரே போட்டியில் 734 ரன்கள், 50 பந்துகளில் சதம் அடித்தார் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியில் 3 பேர் அரைசதம், பாகிஸ்தான் அணியில் ஒரு வீரர் சதம், 3 பேர் அரை சதம் என சளைக்காமல் மோதினார்கள். ஆனால், இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளும் சேர்ந்து 734 ரன்கள் சேர்த்தனர்.
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் போட்டியாக இது அமைந்திருந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டி சவுத்தாம்டன் நகரில் நேற்று நடந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் சேர்த்தது. 374 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ(51), ஜேஸன் ராய்(87), ரூட்(40) ஆகியோர் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க அதை நடுவரிசையில் வந்த கேப்டன் மோர்கன் 48 பந்துகளில் 71 ரன்கள் (ஒருசிக்ஸ்,6பவுண்டரி), ஜோஸ் பட்லர் 55 பந்துகளில் 110ரன்கள்(9சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து வலுவான ஸ்கோரை எட்ட துணை செய்தனர்.
அதிலும் ஜோஸ் பட்லர் அடித்த அடி காட்டடிதான். 32 பந்துகளில் அரைசதம் அடித்த பட்லர், அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் எட்டி சதம் அடித்தார். மிகவிரைவாக சதம் அடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் எனும் பெருமையை பட்லர் படைத்தார். ஆட்டநாயகன் விருதையும் பட்லர் வென்றார்.
வேகமாக சதம் அடித்த வீரர் எனும் பெருமையை ஏற்கனவே பட்லர்தான் வைத்துள்ளார், இது அவரின் 2-வது அதிவேக சதமாகும். கடந்த 2015-ம் ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறியபின், கடந்த 4 ஆண்டுகளில் 35-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணி அடித்துள்ளது குறிப்பிடத்துள்ளது.
இயான் மோர்கனுடன் கூட்டணி அமைத்து விளையாடிய ஜோஸ் பட்லர் 4-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜேஸன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கம் அளித்து, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 44 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் பேர்ஸ்டோ 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குப்பின் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்துவந்த ஜேஸன் ராய் நேற்று அமர்க்களப்படுத்தி 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்து ரூட் களமிறங்கினார். ரூட் 40 ரன்களிலும், ஜேஸன் ராய் 87 ரன்களிலும் வெளியேறினர்.
இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 100 ரன்களையும், 35 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மோர்கனும், பட்லரும் சேர்ந்தபின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. ஜோஸ் பட்லர் அதிரடியாக தொடங்கி, பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். 32 பந்துகளில் அரைசதத்தையும் அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதத்தை நிறைவு செய்தார். மோர்கன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இருவரும் கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் சேர்த்தனர். 89 பந்துகள் மட்டுமே இருவரும் கூட்டாக விளையாடி 162 ரன்கள் சேர்த்தனர். ஜோஸ் பட்லர் 55 பந்துகளில் 110 ரன்களிலும், மோர்கன் 48 பந்துகளி்ல் 71 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
374 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியும் தங்களால் முடிந்த அளவுக்கு நெருக்கடியை இங்கிலாந்துக்கு அளித்தார்கள். அந்த அணியின் பேட்ஸ்மேன் பக்கர் ஜமான் 138 ரன்கள் சேர்த்தது முத்தாய்ப்பாகும்.. மேலும், பாபர் ஆசம் 51 ரன்கள், ஆசிப் அலி 51 ரன்கள், இமாம் உல் ஹக் 35 ரன்கள் சேர்த்தும் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், ஜமான் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாபர் ஆசம் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஜமானுடன் சேர்ந்து 135 ரன்கள் சேர்த்து பிரிந்தார்..
பக்கர் ஜமான் 39 பந்துகளில் அரைசதத்தையும், 84 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து 138 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்ததுதான் திருப்பு முனையாக அமைந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்சம் பக்கர் ஜமான் சேர்த்த 138 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கர் ஜமான் ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனையாகும், அடுத்து வந்த ஆசிப் அலி அதிரடியாக பேட் செய்து 34 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்
கேப்டன் சர்பிராஸ் அகமது துணையாக நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் இமாத் வாசிம்(8), பஹீம் அஷ்ரப்(3) ஆகியோர் தவறிவிட்டதால், சர்பிராஸ் அகமதுவால் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. இதனால், துரதிர்ஷ்டமாக 12 ரன்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. சர்பிராஸ் அகமது 41 ரன்களிலும், ஹசன் அலி 4 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிளங்கெட், வில்லி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago