சவாலுக்கு காத்திருக்கும் வேகங்கள்

By பெ.மாரிமுத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்ட பிறகு ஆட்டம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறிவிட்டது. இரு பந்து வீச்சு முனையிலும் இரு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் 1990 காலக்கட்டங்களில் பெரிய ஆயுதமாக வேகப்பந்து வீச்சாளர்களால் பிரயோகப்படுத்தப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங் கலையை தற்போது காண்பது அரிதாகிவிட்டது. இதன் விளைவுதான் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் சர்வசாதாரணமாக 300-க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்படுவதை கண்கூடாக காண்கிறோம். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரிலும் அதிக அளவில் ரன்கள் வேட்டையாடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு நிலவும் வெப்பமான காலநிலை, உலர்ந்த ஆடுகளங்கள் உள்ளிட்ட காரணிகள் வேகப் பந்து வீச்சாளர்களின் பணியை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த சவால்களை முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், பாகிஸ்தானின் ஹசன் அலி ஆகியோர் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களை பற்றிய ஓர் அலசல்.

ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருக்கக்கூடும். இறுதிகட்ட ஓவர்களில் அபார திறனை வெளிப்படுத்தும் பும்ராவின் உயர்மட்ட செயல்திறன் 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யக்கூடும். வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு பாணி, சீரான வேகத்துடன் பந்தை பவுன்ஸ் செய்வது ஆகியவற்றின் மூலம் பேட்ஸ்மேன்களை ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்துவதில் பும்ரா கைதேர்ந்தவர். அதீத பார்மில் உள்ள பும்ரா, சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். அந்தத் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றதில் பும்ராவின் பங்கு பிரதானமாக இருந்தது.

ஆட்டம் 49

விக்கெட்கள் 85

சிறந்த பந்து வீச்சு 5/27

எக்னாமி 4.51

சராசரி வேகம் 142கி.மீ.

அதிவேகம் 153கி.மீ.

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

இடது கை பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், கடந்த முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 22 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். ஆனால் அதன் பின்னர் கடந்த 4 வருடங்களில் அதிக முறை காயங்களால் அவதிக்குள்ளானார். இதனால் தனது சீரான வேகத்தை இழந்த மிட்செல் ஸ்டார்க், எதிரணியின் பேட்ஸ்மேன்களை மிரட்டக்கூடிய வகையிலான திறனையும் பறிகொடுத்துள்ளார். எனினும் உலகக் கோப்பை தொடர் என்பதால் மிட்செல் ஸ்டார்க்கிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆட்டம் 75

விக்கெட்கள் 145

சிறந்த பந்து வீச்சு 6/28

எக்னாமி 4.95

சராசரி வேகம் 155கி.மீ.

அதிவேகம் 161கி.மீ.

டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து)

இடது கை பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் கடந்த பல வருடங்களாக நியூஸிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வருகிறார். கடந்த உலகக் கோப்பையில் 22 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தியிருந்தார். கட்டுப்பாட்டுடனும், துல்லியமாகவும் பந்து வீசுவதே டிரென் போல்டின் பலம். 29 வயதான அவர், சமீபகாலமாக சிறந்த பார்மில் இல்லை. ஐபிஎல் தொடரிலும் அவருக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டங்களில் 5 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியிருந்தார். எனினும் உலகக் கோப்பை தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பி வேகப் பந்து வீச்சு துறையை சிறப்பாக டிரென்ட் போல்ட் வழிநடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம் 79

விக்கெட்கள் 147

சிறந்த பந்து வீச்சு 7/34

எக்னாமி 5.07

சராசரி வேகம் 129கி.மீ.

அதிவேகம் 143கி.மீ.

காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)

ஐசிசி தரவரிசையில் காகிசோ ரபாடா 5-வது இடம் வகிக்கிறார். 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரபாடா, பந்து வீச்சில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். எந்த விதமான ஆடுகளமாக இருந்தாலும், ஆட்டத்தின் எந்த தருணத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவர். அவரது பலமே சீரான வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வதுதான்.சமீபத்தில் ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் 25 விக்கெட்களை வேட்டையாடி டெல்லி கேபிடல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதில் முக்கிய காரணமாக திகழ்ந்தார். முதுகு வலியால் தற்போது அவதிப்பட்டு வரும் ரபாடா, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என தென் ஆப்பிரிக்க அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆட்டம் 66

விக்கெட்கள் 106

சிறந்த பந்து வீச்சு 6/16

எக்னாமி 4.98

சராசரி வேகம் 150கி.மீ.

அதிவேகம் 158கி.மீ.

ஹசன் அலி (பாகிஸ்தான்)

2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றதில், ஹசன் அலி முக்கிய பங்கு வகித்திருந்தார். 13 விக்கெட்கள் வீழ்த்திய அவர், தொடர் நாயகனாகவும் தேர்வாகியிருந்தார். 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட ஹசன் அலி, மீண்டும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 2-வது முறையாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு உருவாகக்கூடும் என அணி நிர்வாகம் கருதுகிறது.

ஆட்டம் 47

விக்கெட்கள் 78

சிறந்த பந்து வீச்சு 5/34

எக்னாமி 5.36

சராசரி வேகம் 140கி.மீ.

அதிவேகம் 145கி.மீ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்