நவீன கிரிக்கெட் வீரர்களின் சிக் ஆடை கிக் பற்றி பாய்காட் கருத்து

By இரா.முத்துக்குமார்

நவீன கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் அணியும் இறுக்கமான உடைகள் மூலம் செக்ஸீயாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர் என்று ஜெஃப் பாய்காட் கூறியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதளத்தில் வாசகர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தொடரில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் ஜெஃப்ரி பாய்காட் இவ்வாறு கூறியுள்ளார்.

நவீன கிரிக்கெட் வீரர்களின் ‘சிக்’ ஆடையின் ‘கிக்’ பற்றி பாய்காட் கூறியிருப்பதாவது:

"இப்போதைய வீரர்கள் செக்ஸீ லுக்கை விரும்புகின்றனர். அவர்களது தங்கள் உடல் வடிவத்தை வெளிப்படுத்திக் கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். நாம் எப்போதும் பெண்கள் இது போன்று சிக் உடை அணிவது பற்றி நிறைய பேசுகிறோம்.

நவீன வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல, உடலோடு ஒட்டிய உடைகளை அணிய அவர்கள் விருப்பப் படுகின்றனர். அவர்கள் ஜிம் செல்கின்றனர், அழகுக்கான உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தங்களது சிக்ஸ் பேக்ஸ் உலகிற்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கின்றனர். இது பெண்களின் விருப்பத்துடன் வேறுபட்டதா? இல்லை.

எனது மகள் 26 வயதில் டைட்டாக உடை அணிவதை விரும்புகிறவர். ஆனால் 65 வயதில் இப்படி உடை அணிய அவர் விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன்.

விளையாட்டின் போதும், விளையாடாத போதும் இப்போதைய கிரிக்கெட் வீரர்களின் டிரஸ்சிங் ஸ்டைலை நான் கவனித்து வருகிறேன். அவர்கள் சிக் ஆடையில் வலம் வருகின்றனர்.

எனக்கு அது பிடிப்பதில்லை, ஏனெனில் நான் ஒரு அந்தக்கால வீரர். எனக்கு டைட்டாக இருந்தால் பிடிக்காது. என் மகள் கூட டைட் உடையை நான் அணியும் போது நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார், ஆனால் நான் விரும்புவதில்லை, எனக்கு தொந்தி இல்லாவிட்டாலும் எனக்கு டைட் உடை வசதியாக இருப்பதில்லை.

இப்போதைய வீரர்கள் நவீனமாக இருப்பது பற்றி மோசம் என்றோ, நல்லது என்றோ நான் கூறவரவில்லை. இது பற்றி நான் திறந்த மனதுடன் இருக்க விரும்புகிறேன். அது அவர்களது பேட்டிங், பவுலிங் அனைத்திற்கும் மேலாக வெற்றியைப் பாதிக்காத வரை எனக்கு அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை.

அழகாக இருக்கிறதா? அதுபோன்று உடை அணியலாம் அவ்வளவே. இன்றைய வீரர்கள் ஜிம்மிற்கு செல்கிறார்கள், உடலை சிக்கென்று வைக்கப் பாடுபடுகிறார்கள், நல்ல உணவை எடுத்துக் கொள்ள விரும்பிகிறார்கள், செக்ஸீயாக இருக்க விரும்புகிறார்கள், அவர்களது சிக்ஸ் பேக்ஸை காண்பிக்க விரும்புகிறார்கள், பெண்கள் அதை விரும்புகிறார்கள்... இவையெல்லாம் சரிதான். நாம் ஏன் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்?

இதன் மூலம் பெண்களை ஈர்க்க முடிகிறது என்று அவர்கள் நினைத்தால் செய்து விட்டுப் போகட்டும். பெண்கள் எதிரில் தாங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்று அவர்கள் உணர்கிறார்கள்... பெண்கள் இதனை நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர்...”

இவ்வாறு கூறினார் ஜெஃப் பாய்காட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்