பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக ஷாகித் அஃப்ரீடி நியமனம்

இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை 20 ஒவர் கிரிக்கெட் வரையிலும் பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாகித் அஃப்ரீடி நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு மொகமது ஹபீஸ் கேப்டன் பதவியைத் துறந்தார்.

இதனையடுத்து அனுபவமிக்க ஒருவரை கேப்டனாக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தேர்வுக்குழு முடிவெடுத்தது. மேலும் தற்போதைய் அணியில் கேப்டன் பொறுப்பைச் சுமக்கும் அளவுக்கு நிறைவான இளம் வீரர்கள் இல்லாததும் அப்ரீடியைத் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தரப்பினர் கூறுகின்றனர்.

"கடந்த காலத்தில் என்ன நடந்ததோ அதைப்பற்றி இப்போது யோசித்துப் பயனில்லை. இப்போது புதிதாய்த் துவங்குவோம். வீரர்கள் மத்தியில் அச்சமற்ற ஆட்டத்தைக் கொண்டு வருவேன். மேலும் ஒரு கேப்டனாகவும் வெற்றி தோல்விகள் பற்றிய அச்சத்தை வீரர்களிடத்திலிருந்து அகற்றுவேன்” என்று கூறியுள்ளார் ஷாகித் அஃப்ரீடி.

20 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் அப்ரீடி அவ்வளவு வெற்றிகரமான கேப்டன் என்று கூறமுடியாது, 2009ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை ஏற்கனவே 20 ஓவர் அணிக்கு கேப்டனாக இருந்த இவர் 19 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 11-ல் தோல்வி அடைந்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE