ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சு ஆகியவற்றால் ஜெய்பூரில் நேற்று நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. 159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருபந்து மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஜோஸ் பட்லரின் அதிரடியான அரைசதமும், லெக்ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சும்தான் முக்கியக் காரணம். கோபால் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர் ஆகிய 3 பேரும் கோபாலின் கூக்ளியில் விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் முதல் வெற்றியை ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி பெற்றுள்ளது. அதேசமயம், கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு தோல்வி தொடர்ந்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே போட்டித் தொடங்கியதில் இருந்து 4 போட்டிகளாக ஆர்சிபி அணி செல்வதுஇதுதான் முதல் முறையாகும்.
தோல்விக்கு என்ன காரணம்?
gopaljpg100
திறமையான ஆல்ரவுண்டர்கள் இல்லாதது, வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது போன்றவை ஆர்சிபி அணி தோல்விக்கு முக்கியக் காரணம் எனக்குறிப்பிடலாம்.
கோலியின் ஒட்டமொத்த பலவீனமும் இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்பட்டுவிடும் போல் இருக்கிறது. ரோஹித் சர்மாவும், தோனியும் இல்லாவிட்டால் கோலியின் நிலை கவலைக்கிடம் என்பது இந்த ஐபிஎல் தொடரில் புரிந்து வருகிறது.
கேப்டன்ஷிப் என்பது ஒரு கலை, அதை எளிதாக அனைவரிடமும் இருந்து எதிர்பார்த்துவிடமுடியாது. திறமையான கேப்டன் இருந்தால், எந்த இக்கட்டான சூழலிலும் இருந்து அணியை வெற்றிக்கோ அல்லது எதிரணிக்கு கடும் நெருக்கடியையும் கொடுக்க முடியும்.
அதை இந்த ஐபிஎல் சீசனில் தோனி, தினேஷ் கார்த்திக், அஸ்வின் மட்டுமே செய்து வருகிறார்கள். மற்ற அணிகளின் கேப்டன்கள் நெருக்கடி, அழுத்தமான சூழலின் பிடியில் ஆட்பட்டு தங்களின் முடிவெடுக்கும் திறனையும், யுத்தியைும் இழந்துவிடுகிறார்கள். அதில் விராட் கோலியும் விதிவிலக்கல்ல.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானஆட்டம், சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் என ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுமொத்த நம்பிக்கை இழந்ததுபோல் விராட் கோலியின் செயல்பாடும், அணி வீரர்களின் செயல்பாடும் இருக்கிறது.
சிஎஸ்கேவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் 70 ரன்கள், சன்ரைசர்ஸ்க்கு எதிராக 113 ரன்கள் என மோசமான தோல்வியை அடைந்தார். அந்த போட்டிகளில் கோலியின் கேப்டன்ஷிப் என்பது ஓடி ஒளிந்துகொண்டது. கோலியும் தனது போராட்ட குணத்தை பேட்டிங்கிலும் காட்டவில்லை, தனது வியூகங்களிலும் காட்டவில்லை.
ஆர்சிபி அணியின் 4 தோல்விகளையும் அணியின் தோல்வியாக, வீரர்களின் தோல்வியாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது, இது ஒட்டுமொத்த கேப்டன்ஷிப் தோல்வி.
தொடர்ந்து இதோபோன்ற தோல்விகளை கோலி எதிர்கொண்டிருந்தால், உலகக்கோப்ைபப் போட்டியின் போது மனரீதியாக நம்பிக்ைக இழந்தவராக மாறி, அவரின் எண்ண அலைகள் அணியிலும் எதிரொலித்துவிடும்.
கடந்த ஐபிஎல் தொடரில் தனக்கு கேப்டன்ஷிப்வரவில்லை, பேட்டிங்கும் வரவில்லை என்று உணர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் கேப்டன் பதவியை ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கி, களமிறங்காமல் தவிர்த்துவிட்டார். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி பல முக்கிய வெற்றிகளைப் பெற்றது.
அதுபோல் தன்னால் முடியவில்லை என்றால், கோலி உலகக்கோப்பைக்காக தயார் செய்யும் பணியில் இறங்கி, வேறுயாரிடமாவது கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிவிடலாம்.
அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் கடந்த 3 போட்டிகளில் தோல்வி அடைந்தமைக்கும், ரஹானேயின் கேப்டன்ஷிப்தான் காரணம்.
எந்த நேரத்தில் எந்த பேட்ஸ்மேனைக் களமிறக்க வேண்டும், எந்த பேட்ஸ்மேனுக்கு யாரை பந்துவீசச் செய்யலாம் என்பதில் குழப்பத்துடன் செயல்பட்டதால் கடந்த 3 போட்டிகளிலும் வெற்றிக்கு அருகே வந்து அதை கோட்டைவிட்டனர். ஸ்மித் தொடர்ந்து அணியில் நீடிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ரஹானே கேப்டன்ஷிப் ஸ்மித்துக்குச் செல்லலாம்.
ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. பர்தீவ் படேல், கோலி ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் பவர்ப்ளே வரை பவுண்டரிகள் அடித்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இதனால் பவர்்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்தது.
ஸ்பின்னருக்கு அச்சப்படும் கோலி
kohli2jpg100
7-வது ஓவரை ஸ்ேரயாஸ் கோபால் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கோலி கூக்ளியில் க்ளீன் போல்டாகி 23 ரன்களில் வெளியேறினார். கடந்த ஐபிஎல் முதல் சர்வதேச கிரிக்கெட்டிலும் விராட் கோலி லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழப்பது நடந்து வருகிறது, ஆடம் ஸாம்ப்பாவை கோலியினால் சரியாக ஆட முடியாததை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பார்த்தோம், கடந்த ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் உட்பட லெக் ஸ்பின்னர்களிடம் அவர் ஆட்டமிழந்ததைப் பார்த்தோம்,
அந்த வரிசையில் இன்று ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகத்திறமை வாய்ந்த ஷ்ரேயஸ் கோபால் என்ற லெக் ஸ்பின்னரின் கூக்ளியில் கிளீன் பவுல்டு ஆகியுள்ளார் விராட் கோலி.
மிக அழகாக தூக்கி வீசப்பட்ட கூக்ளி கோலியை அவரது பேவரைட் ட்ரைவ் ஆன கவர் ட்ரைவ் ஆட அழைத்தது, ஆசைக் காட்டியது. கொஞ்சம் மெதுவாக கொஞ்சம் வைடாக விழுந்த பந்தை கோலி ஆசைப்பட்டு கவர் டிரைவுக்குச் சென்றார், பந்து அவரது மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத் பதம் பார்த்தது.
ஐபிஎல் 2018 முதல் கோலியின் கூக்ளிக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் 85.7 என்றும் ஆஃப்ஸ்பின்னுக்கு எதிராக 75 என்றும் கூறுகிறது புள்ளிவிவரங்கள்.
கோபால் கலக்கல்
அடுத்த வந்த டவில்லியர்ஸ்(13), ஹெட்மயர்(1) நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் கோபாலின் 9-வது ஓவரில் கோபாலிடமே கேட்ச் கொடுத்து டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார், 11-வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஹெட்மயர் வெளியேறினார். 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது.
ஸ்ரேயாஸ் கோபால் நேற்று முன்னணி வீரர்களை திணறவைத்தார். அவரின் லெக் ஸ்பின்னை எதிர்கொண்டு விளையாட மிகவும் சிரமப்பட்டனர்.
பார்தீவ் அரைசதம்
பர்தீவ் படேலுடன், ஸ்டோனிஸ் இணைந்தார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் பர்தீவ் நிதானமாக பேட் செய்தார். தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரிகளை அடித்தார். 29 பந்துககளில் பர்தீவ் படேல் அரைசதம் அடித்தார்.
ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து பர்தீவ் படேல் 67 ரன்கள் சேரத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த மொயின்அலி, ஸ்டோனிஸுடன் சேர்ந்தார். ஸ்டோனிஸ் 31 ரன்களிலும், மொயின் அலி 18 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பட்லர் அதிரடி
butlerjpg100
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பட்லர், ரஹானே நல்ல தொடக்கத்தை அளித்தனர். பட்லர் தனக்கே உரிய அதிரடியில் பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்்த்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் சேர்த்தது. சைனி வீசிய 2-வது ஓவரில் ரஹானேவுக்கான கேட்ச் வாய்ப்பை கோலி கோட்டைவிட்டார்.
சாஹல் வீசிய 8-வது ஓவரில் ரஹானே 22 ரன்களில் எல்பிடபில்யு முறையில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஸ்மித் களமிறங்கினார்.
பட்லரும், ஸ்மித்தும் ரன்ரேட் குறையாமல் பேட் செய்தனர். அவ்வப்போத பவுண்டரிகளை அடித்த பட்லர் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜெய்ப்பூர் மைதானத்தில் பட்லர் தொடர்ந்து அடிக்கும் 4-வது அரைசதம் இதுவாகும். அரைசதம் அடித்த சிறிதுநேரத்தில் பட்லர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
சாஹல் வீசிய 13-வது ஓவரில் ஸ்டோனிஸடம் கேட்ச் கொடுத்து 59 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தா். இதில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அடுத்துவந்த திரிபாதி, ஸ்மித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி அருகே அழைத்துச் சென்றனர். கடைசி இரு ஓவர்களில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் சேர்த்தநிலையில் கடைசிப்பந்தில் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. யாதவ் பந்துவீச திரிபாதி எதிர்கொண்டார். முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒருரன்னும் எடுத்தனர். 3-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் ஒருரன் எடுத்தார் ஸ்டோக்ஸ். 5-வது பந்தில் திரிபாதி மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
திரிபாதி 34 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் ேசர்த்து வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago