ஐசிசி சர்வதேச டி20 அணிக்கு கேப்டன் தோனி

By செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள சர்வதேச இருபது ஓவர் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி அறிவிக்கப் பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தாலும், அவரே தலைசிறந்த கேப்டன் என்று ஐசிசி கவுரவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் அனைத்து அணி வீரர்களின் செயல்பாடுகளையும் வைத்து, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் தோனி தவிர இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட விராட் கோலி, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வாக்கெடுப்பின் அடிப்படையில் அல்லாமல், இந்த உலகக் கோப்பையில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படை யில் இந்த அணி தேர்வு செய்யப் பட்டுள்ளது.

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், டி20 உலகக் கோப்பையில் அவர்கள் எடுத்த ரன் விவரம்

ரோஹித் சர்மா (இந்தியா, 200 ரன்கள்). ஸ்டீபன் மைபெர்க் (நெதர்லாந்து, 224 ரன்கள்), விராட் கோலி (இந்தியா, 319 ரன்கள்), ஜேபி டுமினி (தென்னாப்பிரிக்கா, 187 ரன்கள்), மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா, 147 ரன்கள்), தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர் 50 ரன்கள், 6 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்), டேரன் சமி (மேற்கிந்தியத்தீவுகள், 101 ரன்கள்), அஸ்வின் (இந்தியா 11 விக்கெட்), டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்), சாமுவேல் பத்ரி (மேற்கிந்தியத்தீவுகள் 11 விக்கெட்), லசித் மலிங்கா (இலங்கை, 5 விக்கெட்) சந்டோகி (மேற்கிந்தியத்தீவுகள் 9 விக்கெட், 12-வது ஆட்டக்காரர்).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE