கிறிஸ் லின் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை, அடுத்து வந்த வீரர்கள் தவறவிட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 161 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேர்த்தது.
ஒரு கட்டத்தில் கிறிஸ் லின் களத்தில் நிற்கும் போது, கொல்கத்தா அணியின் ஸ்கோர் 180 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக், ரஸல், உத்தப்பா, ராணா, கில் ஆகியோர் நிலைத்து ஆடாததால், 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதிரடியாக ஆடிய கிறிஸ் லின் ஐபிஎல் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். 51 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 40 வயதில் ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரர் தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்துவரும் ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங் செய்ய முடிவு செய்தார். சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆனால், கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், நரேன், குர்னே மீண்டும் அழைக்கப்பட்டனர்.
கிறிஸ் லின், நரேன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே லின் 2 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். சாஹர் வீசிய 3-வது ஓவரிலும் லின் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். தாக்கூர் வீசிய 4-வது ஓவரிலும் லின் இரு பவுண்டரிகளை தள்ளினார். ஒருபுறம் லின் அதிரடியில் இறங்க, நரேன் நிதானமாக பேட் செய்தார்.
பந்துவீச்சில் மாற்றம் கொண்டுவந்தநிலையில் சான்ட்னர் பந்துவீசினார். 5-வது பந்தில் டூப்பிளசியிடம் லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து நரேன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து ராணா களமிறங்கி, லின்னுடன் சேர்ந்தார். லின் தொடர்ந்து அதிரடியில் இறங்கியதால் ஸ்கோர் வேகமெடுத்தது. பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்தது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லின், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 77 ரன்கள் சேர்த்தது.
11-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். முதல் பந்தில் லாங் ஆன் திசையில் டூப்பிளசியிடம் கேட்ச் கொடுத்து ராணா21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா, டக் அவுட்டில் டூப்பிளசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்ததால், கொல்கத்தா அணி தடுமாறியது.
அடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கி ராணாவுடன் சேர்ந்தார் ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி என 23 ரன்களை லின் சேர்த்தார்.
15-வது ஓவரை மீண்டும் இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் டீப் ஸ்குயரில் தாகூரிடம் கேட்ச் கொடுத்து லின் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்த நிலையில், அதே ஓவரில் ஷோரேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஸல் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. லின் ஆட்டமிழந்தபின் அடுத்துவந்த வீர்ர்களும் ஸ்கோரை முன்னெடுக்க தவறிவிட்டனர். கில் களமிறங்கி, தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்தார். தினேஷ் கார்த்திக் இந்த முறையும் நிலைத்து ஆடாமல் 18 ரன்களில் தாக்கூர் பந்துவீச்சில் டூப்பிளசிஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தாக்கூர் வீசிய கடைசி ஓவோரில் சுப்மான் கில் 15 ரன்களிலும், குல்தீப் யாதவ் ரன்அவுட் ஆகியதால், கொல்கத்தா அணியின் ஸ்கோர்161 ரன்களுக்குள் மட்டுப்பட்டது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 161 ரன்கள் சேர்த்தது. கடைசி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே தரப்பில் தாஹீர் 4 விக்கெட்டுகளையும், தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago