தோனி, அம்பதி ராயுடுவின் பொறுப்பான ஆட்டம், சான்ட்னரின் சிக்ஸர் ஆகியவற்றால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ராஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 வி்க்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப்ப பெற்றது.
2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்டிடம் சிக்கி சீரழிந்த பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் கடைசி ஓவரை வீசி சிக்கிக்கொண்டார். கடைசி ஓவரி்ல் 18 ரன்களை தேவை எனும்போது கட்டுக்கோப்பாக வீசத் தெரியாமல் பென் ஸ்டோக்ஸ் சொதப்பினார்.
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமாக 4-வது முறையாக சேஸிங் செய்து வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகளில் ஒரு தோல்வி உள்பட 12 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
100-வது வெற்றி
சிஎஸ்கே அணியின் ேகப்டன் தோனி நேற்றைய வெற்றியின் மூலம் புதிய சாதனை படைத்தார். சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்றபின் தோனி பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை இந்தச் சாதனையை எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் தோனி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோனி அடிக்கும் 2-வது அரைசதம் இதுவாகும்.
100-வது விக்கெட்
மேலும், ரவிந்திர ஜடேஜா இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை ஜடேஜா பெற்றார்.
இந்த போட்டயில் தோனியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய தோனி, ‘கேப்டன் கூல்’ என்பதை நிரூபித்துவிட்டார்.
அணியை விக்கெட் சரிவில் இருந்து கட்டி இழுத்து வெற்றிவரை அழைத்தது வந்து, தன்னை உலக அணிகளில் மிகச்சிறந்த கேப்டன் என்பதை தோனி மீண்டும் உறுதிசெய்துவிட்டார்.
கேப்டன் உதாரணம்
கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்கு 18 சதவீதம் மட்டுமே வாய்ப்புகள் இருந்த நிைலயில் அந்த கணிப்புகள் அனைத்தையுமே தவிடுபொடியாக்கிவிட்டது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.
நிச்சயமாக சர்வதேச அணிகளின் கேப்டன்கள் கேப்டன்ஷிப் குறித்து தோனியிடம் சிறப்பு வகுப்புகளை படிக்கலாம் எனும் அளவுக்கு ஏராளமான நுணுக்கங்களை தோனி வைத்துள்ளார். குறிப்பாக ஆர்சிபி அணியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான கோலி தோனியிடம் இருந்து அதிகம் கற்க வேண்டும். தோனி இல்லாத கோலி, “காலி” என்று சொல்வதில் மிகையில்லை.
5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடுவுடன் சேர்ந்து 95 ரன்கள் சேர்த்து அணியை வழிநடத்தினார் தோனி. கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் இருக்கும் நிலையில் ஆட்டம் ராஜஸ்தான் அணியின் பக்கம் செல்லவே அதிகமான வாய்ப்பு இருந்தபோது அதை நேர்த்தியாக தங்கள் பக்கம் திருப்பிய தோனியின் பேட்டிங் அமர்க்களம், அழகு.
பொங்கி எழுந்த தோனி
குறிப்பாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்கிற போது, நோபாலாக வீசப்பட்ட பந்துக்கு ஸ்ட்ரெய்ட் அம்பயர் நோபல் கொடுத்தார். ஆனால், லெக் அம்பயர் நோபாலை ரத்து செய்தார்.இதனால் பொங்கி எழுந்த தோனி, மைதானத்துக்கு வெளியே இருந்து வந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவரை கேப்டன் கூல் என்று மட்டுமே தோனியைப் பார்த்த ரசிகர்களுக்கு தோனி நடுவரிடம் அணிக்காக வாதிட்டது வியப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு தோனிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், அனைத்து தடைகளையும் மீறி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே வென்றதுதான் முத்தாய்ப்பான விஷயமாகும்.
விக்கெட் சரிவு
152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே வாட்ஸன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னா 2-வது ஓவரில் ஆர்ச்சரால் ரன் அவுட் செய்யப்பட்டு 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த ராயுடு, டூப்பிளசிஸுடன் இணைந்தார்.
டூப்பிளசிஸ் அடித்த ஷாட்கள் சரியாக அவருக்கு பொருந்தி வரவில்லை. அதனால், உனத்கட் வீசிய 4-வது ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த பந்தை திரிபாதி கேட்ச் பிடிக்க 7 ரன்னில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தா். அடுத்து வந்த கேதார் ஜாதவ், ராயுடுவுடன் சேர்ந்தார்.
ஆர்ச்சர் வீசிய 5-வது ஓவரின் 4-வது பந்தை ஜாதவ் ஆப்-சைடில் அடிக்க அதை ஸ்டோக்ஸ் அந்தரத்தில் தாவி மிக அழகாக கேட்ச் பிடித்தார். உண்மையில் இந்த கேட்சை யாரும் எதிர்பார்க்கவில்லை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாகப் பிடித்தார். இதனால், பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
பொறுப்பான ஆட்டம்
அடுத்து வந்த கேப்டன் தோனி களமிறங்கி, ராயுடுவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். கேப்டன் கூல் என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பதற்றப்படாமல் ஷாட்களை தோனி தேர்வு செய்து ஆடினார். கோபால் வீசிய 10-வது ஓவரில் தோனி இறங்கிவந்து அடித்து சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டு, திரும்பிவந்துடேனு சொல்லு என்ற ரீதியில் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
பராக் வீசிய 11-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும், ராயுடு ஒருபவுண்டரியும் விளாசினர். கோபால் வீசிய 13-வது ஓவரில் மீண்டும் தோனி சிக்ஸர் காட்டினார். உனத்கட் வீசிய 15-வது ஓவரில் ராயுடு, சிஸ்கர், பவுண்டரி அடித்து ரன் வேகத்தை உயர்த்தினார். 41 பந்துகளில் ராயுடு அரைசதம் அடித்தார்.
3 ஓவரில் 39 ரன்கள்
கடைசி 3ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒருபவுண்டரி அடித்தார். ராயுடு 57 ரன்கள் சேர்த்தநிலையில் 4-வது பந்தில் கோபாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். ராயுடு கணக்கில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து ஜடேஜா களமிறங்கி தோனியுடன் சேர்ந்தார்.
12 பந்துகளில் 30 ரன்
கடைசி 2ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் தோனி ஒரு பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். இதனால், கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்பது தெரியாமல் ரசிகர்கள் இருக்கை நுனிக்குவந்தனர். தோனி களத்தில் இருப்பதால், சிஎஸ்கே பக்கம் வெற்றி இருப்பதையும் ரசிகர்கள் மறுக்கவில்லை.
திக்,திக் கடைசி ஓவர்
கடைசி ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை ஜடேஜா ஆப்-சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2-வது பந்து நோபாலாக வீசப்பட்டதால், அதில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார். யார்கராக வீசப்பட்ட 3-வது பந்தில் தோனி க்ளீன் போல்டாகி 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழந்தபோது, அரங்கமே முழக்கமிட்டதால், ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் பக்கம் வெற்றி செல்லும் என எதிர்பார்த்தனர்.
வாக்குவாதம்
அடுத்து சான்ட்னர் களமிறங்கினார். 4-வது பந்தை ஸ்டோக் வீசினார். இந்த பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது அதற்கு ஸ்ட்ரெய்ட் அம்பயர் , நோ-பால் அளித்தார். ஆனால், ஸ்டிரைட் அம்பயர் நோபாலை ரத்து செய்தார் லெக் அம்பயர். இதில் 2 ரன்கள் மட்டுமே சான்ட்னர் எடுத்தார். ஆனால், இந்த தோள்பட்டைக்கு மேலே பந்துவீசப்பட்டும் நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் நடந்து வந்தார்.
இதனால், ஏதோ பிரச்சினை ஏற்படப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். உடன் பென் ஸ்டோக்ஸும் பேச, அந்த இடத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குமுன் தோனி இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் பார்த்து இல்லை என்பதால் புதிதாக இருந்தது. ஆனால், நடுவர்கள் நோ-பால் தர மறுத்துவிட்டதால், தோனி கோபத்துடன் வெளியேறினார்.
வெற்றி சிக்ஸர்
5-வது பந்திலும் சான்ட்னர் 2 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கடைசிப்பந்தை ஸ்கோட்ஸ் வைடாக வீசியதால், ஒரு ரன் கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் சான்ட்னர் ஆப்-சைடில் ஒரு சிக்ஸர் அடிக்க பரபரப்பான வெற்றியுடன் சிஎஸ்கே ஆட்டத்தை முடித்தது.
ஜடேஜா 9 ரன்களிலும், சான்ட்னர் 10 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ்வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ரஹானே, பட்லர் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சாஹர் வீசிய முதல் ஓவரில் பட்லர் சிக்ஸர், பவுண்டரியும், சான்ட்னர் வீசிய 2-வது ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகள் விளாசினார்.
சாஹர் வீசிய 3-வது ஓவரில் பவுண்டரி அடித்த ராஹனே, 3-வது பந்தில் எல்பிடபில்யு முறையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம்ஸன் களமிறங்கினார். தாக்கூர் வீசிய 4-வது ஓவரில் பட்லர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினர். ஆனால், 4-வது பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தார்.
அதன்பின் பந்த வீரர்களான ஸ்மித்(15) திரிபாதி(10), சாம்ஸன்(6), ஸ்டோக்ஸ்(28), பராக்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவரில் ஸ்ேரயாஸ் கோபால் அதிரடியாக பேட் செய்து சிக்ஸர்,பவுண்டரியும், ஆர்ச்சர் ஒரு பவுண்டரியும் விளாசினர். இதனால், அணியின் ஸ்கோர் 151 ரன்களைத் தொட்டது.
20ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்கள் சேர்த்தது. கோபால் 19 ரன்களிலும், ஆர்ச்சர் 13 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தாக்கூர், சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago