மும்பை இந்தியன்ஸ் புதிய மைல்கல்: குவின்டன் டீ காக் அதிரடியில் 187 ரன்கள் குவிப்பு

By க.போத்திராஜ்

மும்பையில் நடந்து வரும் 12-வது ஐபிஎல் டி20 போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் குவின்டன் டீ காக்கின் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் களமிறங்கியபோது, புதிய சாதனையை படைத்தது. உலகில் 200 டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் அணி எனும் பெருமையை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது. இதற்கு முன் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சோமர்செட் அணி 199 போட்டிகளும், ஹேம்ப்ஷயர் 194 போட்டிகளிலும் விளையாடி இருந்தன. அதை மும்பை இந்தியன்ஸ் அணி முறியடித்துள்ளது.

காயம் காரணமாக கடந்த போட்டியில் இடம் பெறாமல் இருந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் களமிறங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோனும், ரியான் பராகுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதமும் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்துவீ்ச்சாளர் ஸ்ரோயாஸ் கோபால் இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோபால் 4 ஓவர்கள் வீசிய 21 ரன்கள் விட்டுக்கொடுத்து கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ரோஹித் சர்மா, டி காக் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தையும், அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். முதல் இரு ஓவர்கள் வரை நிதானமாக பேட் செய்த ரோஹித்தும், டீ காக்கும் அடுத்தடுத்து ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

கவுதம் வீசிய 3-வது ஓவரில் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரிகள் விளாசினார். குல்கர்னி வீசிய 4-வது ஓவரில் ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

இருவரின் அதிரடியைப் பார்த்த ரஹானே ஆர்ச்சரை பந்துவீச அழைத்தார். ஆர்ச்சர் வீசிய 5-வது ஓவரில் டீகாக் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி மிரட்டினார். பவர்ப்ளே ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்தது.

லிவிங்ஸ்டோன் வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களை டீகாக் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். கவுதம் வீசிய 10 ஓவரில் ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளை விளாசினார். ஆர்ச்சர் வீசிய 11-வது ஓவரில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 47 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிலைக்கவில்லை. குல்கர்னி வீசிய 14-வது ஓவரில் போல்டாகி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு பொலார்ட் களமிறங்கினார். கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிரடியாக வெற்றி பெற வைத்த பொலார்ட் இந்த முறை ஏமாற்றம் அளித்தார்.

ஆர்ச்சர் வீசிய 16-வது ஓவரில் மிட்விக்கெட் திசையில் கோபாலிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் பொலார்ட் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் டீகாக் நிதானமாக பேட் செய்து வந்தார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, வந்தவுடன், குல்கர்னி பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசினார். 18-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து டீ காக் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார்.  அதேஓவரில் ஹர்திக் பாண்டியா ஹெலிகாப்டர் ஷாட்டில் ஒரு சிக்ஸர் அடித்தார்.

உனத்கட் வீசிய 20 ஓவரில் இஷான் கிஷன் ஒருபவுண்டரி அடித்தநிலையில் அடுத்தபந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர், ப வுண்டரி விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்