ஐபிஎல் 2019 தொடக்கப் போட்டி ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே மொத்தமாகவே 141 ரன்கள் எடுக்கப்பட்டு சொதப்பலான தொடக்கமாக அமைய அப்போது தோனி பிட்சை கடுமையாக விமர்சித்தார். மீண்டும் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டமும் பிட்சினா எந்தவித சுவாரசியமும் இல்லாமல் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
ஆனால் தோனி முதல் போட்டிக்குப் பிறகு எப்படி பிட்சை விமர்சித்தாரோ அதே பாணியில் நேற்றைய பிட்சையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிஎஸ்கே ஸ்பின்னர்கள் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா இணைந்து 15 டாட்பால்களோடு சேர்ந்து 12 ஒவர்களில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து சிஎஸ்கே கேப்டன் தோனி மீண்டும் ஒரு முறை பிட்ச் பற்றி அதிருப்தி வெளியிட்டார்:
மீண்டும் முதல் போட்டி போலவே அமைந்து விட்டது. பிட்ச் பற்றி புகார் கூறிக்கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். பிராவோ காயமடைந்த பிறகே அணிச்சேர்க்கை எங்களுக்குக் கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை, டேவிட் வில்லேயும் இல்லை.
ஆகவே எங்களுக்கு இது நல்ல பிட்ச். ஆனால் நாங்கள் இத்தகைய பிட்ச்களில் நாங்கள் ஆட விரும்புகிறோம் என்று நான் கருதவில்லை. காரணம் இந்தப் போட்டிகள் குறைந்த ரன்கள் போட்டியாகி விடுகின்றன. மேலும் எங்கள் பேட்ஸ்மென்களுக்கே ரன் எடுப்பது கடினமாகி விடுகிறது.
அதுவும் முதலில் பேட் செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனிப்பொழிவினால் 2ம் பாதியில் கொஞ்சம் பரவாயில்லை என்று இருக்கிறது பிட்ச்.
இம்மாதிரி பிட்ச்கள் அல்லாமல் பேட்டிங் சாதக பிட்ச்கள் எங்களுக்கு அமைந்தால் நாங்கள் சரியான அணிச்சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னைப்பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவும் இல்லை, பவுலிங் பயிற்சியாளர் இருக்கிறார், பவுலர்கள் முடிவுதான், அவர்கள் திட்டம் சரிப்பட்டு வரவில்லை எனில் நான் நுழைவேன்.
அதிக திட்டமிடுதல் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். தனித்தனியான சந்திப்புகளைத்தான் சமீப காலமாக மேற்கொண்டு வருகிறோம் இதில் கூட என் பங்கு அதிகமில்லை.
இவ்வாறு கூறினார் தோனி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago