பிஎன்பி பரிபாஸ் ஒபன் தொடரில் ஆடவர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொனிமிக் தியம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், 4-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தியம் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 6-வது முறையாக கோப்பை வெல்லும் பெடரரின் கனவு தகர்ந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவின் பினாகா அந்த்ரேஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார். தரவரிசையில் 60-வது இடத்தில் இருந்த பினாகா இந்தத் தொடரில் வைல்டு கார்டு மூலம் நுழைந்திருந்தார். இறுதிப் போட்டியில் அவர், 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தினார்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் வைல்டு கார்டு வீராங்கனை ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். முதன்முறையாக சர்வதேச டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் பினாகா அந்த்ரேஸ்கு, டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 36 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago