சாம்பியன்ஸ் லீக்கில் எதிரணிகளை வீழ்த்த பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை: தோனி

By பிடிஐ

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் எதிரணிகளை வீழ்த்துவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை என அதன் கேப்டன்மகேந்திர சிங் தோனி கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் டால்பின்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரெய்னா 90 ரன்களும் (43 பந்துகளில்), மெக்கல்லம் 49 ரன்களும் (23 பந்துகளில்), ஜடேஜா 40 ரன்களும் (14 பந்துகளில்) குவித்தனர். பின்னர் ஆடிய டால்பின்ஸ் அணி முதல் 3 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. தொடர்ந்து வேகமாக ஆடிய அந்த அணி இறுதியில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு பேசியதோனி, “வெற்றி பெற வேண்டுமானால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவது அவசியம். ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன்கள் 240 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாது. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்தனர். அதேநேரத்தில் விக்கெட்டையும் காப்பாற்றினர். ரெய்னா, மெக்கல்லம் ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடி ரன் குவித்து வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினர்” என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ரெய்னா பேசுகையில், “ஸ்மித்தும், மெக்கல்லமும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டால், அதன்பிறகு வருகிறவர்கள் சிறப்பாக ஆட முடியும். இப்போது சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறோம். இதேபோன்று அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவதற்கு காத்திருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்