தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் 24-ம் தேதி தொடங்கும் கொல்கத்தாவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
கீப்பிங் திறமை, பேட்டிங் திறமை, கேப்டன்ஷிப் ஆகியவை இருந்தும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கவனிக்க வைக்க தினேஷ் கார்த்திக்குக்கு கிடைத்திருக்கும் சரியான வாய்ப்பு.
2 முறை சாம்பியன்
12-வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணி இதுவரை 2 முறை(2012, 2014) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது, 5 முறை லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது, 4 முறை ப்ளே ஆப் சுற்றுவரை சென்றுள்ளது. இதில் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ப்ளே ஆப் சுற்றுவரை முன்னேறி தனது திறமையை நிரூபித்துள்ளது கேகேஆர் அணி.
கொல்கத்தாஅணிக்கு கடந்த ஆண்டுதான் முதல்முறையாக கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டாலும், அவரின் கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்து அணியை ப்ளே ஆப் சுற்றுவரை வழிநடத்திச் சென்றார். இந்த முறை அணியில் வீரர்கள் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், சாம்பியன் பட்டம் வெல்லவும் கேகேஆர் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அணிக்கு பயற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் இருப்பது பெரும் பலமாகும்.
இதுவரை
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 164 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 86 போட்டிகளில் வென்றுள்ளது, 76 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன.
அதிகபட்சம்
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக இதுவரை முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் 3 ஆயிரத்து 35 ரன்கள் சேர்த்துள்ளார், மே.இ.தீவுகள் வீரர் சுனில் நரேன் 112 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அதிலும் சுனில் நரேன் தொடர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டுவரை ஏதாவது ஒரு போட்டியிலாவது 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவந்துள்ளார். 2012-ம் ஆண்டு 5விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மறக்கமுடியாத சாதனை
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை மறக்கமுடியாத சாதனையாக இருந்துவருவது, தொடக்க ஐபிஎல் போட்டியான 2008-ம் ஆண்டில் பிரன்டன் மெக்கலம் 158 ரன்கள் விளாசியது சாதனையாகும். அதன்பின் கடந்த 11 ஆண்டுகளாக எத்தனையோ வீரர்கள் அணிக்குள் வந்தாலும், சென்றாலும், ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
இந்த ஐபிஎல் சீசனுக்கு அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியில் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன், சுப்மான் கில், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிவம் மவி, நிதின் ராணா, ரிங்கு சிங், கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.
நீக்கம்
மாறாக, மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஜான்ஸன், டாம் கரன், கேமரூன் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ஜவான் சீர்லெஸ் ஆகியோர் அனுப்பட்டனர்.
புதிய வரவு
இவர்களுக்கு பதிலாக, கார்லோஸ் பிராத்வெய்ட், லாக்கி பெர்குசன், அன்ரிச் நார்ட்ஜே, நிகில் நாயக், ஹேரி குர்னே, யாரா பிரித்விராஜ், ஜியோ டென்லி, ஸ்ரீகாந்த் முன்டே ஆகியோர் வாங்கப்பட்டனர்.
முக்கிய வீரர்கள்
இவர்களில் இந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ள பிராத்வெய்ட், நியூசி.வேகப்பந்துவீச்சாளர் பெர்குசன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னே, தென் ஆப்பிரிக்க வீரர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்ட், டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை கடைசி ஓவரில் புரட்டி எடுத்து கோப்பையை வென்று கொடுத்ததை இன்றுவரையாரும் மறக்க முடியாது.
அதிரடித் தொடக்கம்
மேலும் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரேன் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். கடந்த சீசனில் சிறந்த தொடக்க கூட்டணி, அதிரடி கூட்டணியாகத் திகழ்ந்தார்கள்.
வலுவான நடுவரிசை
இவர்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் ராபின் உத்தப்பா, நடுவரிசையில் சுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரஸல், நிதிஸ் ராணா என வலுவான பேட்டிங் இருக்கிறது. இதில் பிராத்வெய்ட், நார்ட்ஜே ஆகியோர் அணிக்குள் வரும்போது கூடுதலாக வலுவடையும். நடுவரிசையைப் பொறுத்தவரை இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கலந்து உள்ளனர்.
பலவீனம்
எந்த அளவுக்கு பேட்டிங்கில் வலுவாக இருக்கிறதோ அதேஅளவுக்கு நடுவரிசையின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகும். சிலநேரங்களில் திடீரென மளமள விக்கெட்டுகளை இழந்துவிடுவதும் உண்டு. அந்தநேரத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடி, பினிஷிங் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவார்.
கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சு
பந்துவீச்சில் பிராத்வெய்ட், ஆன்ட்ரூ ரஸல், பெர்குஷன், நார்ட்ஜே, குர்னே, நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, சிவம் மவி, ஸ்ரீகாந்த் முந்தே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பிராத்வெய்ட், குர்னே, நார்ட்ஜே, நாகர்கோட்டி ஆகியோர் டெத் ஓவர்களை வீசும் திறமை கொண்டவர்கள்.
கலக்கும் சுழல்
சுழற்பந்துவீ்ச்சில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜியோ டென்லி, பியூஸ் சாவ்லா ஆகிய 4 வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் இந்த அணி வேகப்பந்துவீச்சுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலும் சர்வதேச அணிகளை கலங்க வைத்த ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுனில் நரேன் இருப்பதும், லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா எதிரணிக்கு சவால் விடுக்கக் கூடியவர்கள்.
நிதிஷ் ராணா
தினேஷ் கார்த்திக்(கேப்டன்)
ஆன்ட்ரூ ரஸல்(வே)
கமலஷ் நாகர்கோட்டி (வே)
ரிகு சிங்
அங்குஷ் பெயின்ஸ்
ஸ்ரீகாந்த் முந்தே(வே)
பிரசித் கிருஷ்ணா(வே)
ராபின் உத்தப்பா
ஜியோ டென்லி(சு)
பிரித்வி ராஜ்(வே)
சுப்மான் கில்
பிராத்வெய்ட்(வே)
குல்தீப் யாதவ்
கிறிஸ் லின்
சுனில் நரேன்(சு)
பியூஷ் சாவ்லா
சிவம் மவி(வே)
அன்ட்ரிட் நார்ட்ஜே(வே)
பெர்குசன்(வே)
ஹேரி குர்னே(வே)
துருப்புச்சீட்டு
Shubman-Gill-1jpgசுப்மான் கில்: படம் உதவி ஐபிஎல் ட்விட்டர்100
இந்த தொடரில் அணியின் துருப்பு்சீட்டு வீரராக இருக்கூடியவர் சுப்மான் கில். கடந்த சீசனில் அறிமுகமாகி பல போட்டிகளில் தனது அதிரடி ேபட்டிங்காலும், ேநர்த்தியான ஷாட்களாலும் கவனிப்பை ஈர்த்தவர். ரஞ்சி கோப்பை, முஷ்டாக் அலி கோப்பை போன்றவற்றிலும் சிறப்பாக பேட் செய்து சூப்பர் ஃபார்மில் இருக்கிறார் கில். ஆதலால், இந்த சீசனில் கேகேஆர் அணியின் துருப்புச் சீட்டாக கில் இருப்பார்.
ஆண்டு
கேப்டன்
பேட்ஸ்மேன்
பந்துவீச்சாளர்
வெற்றி சதவீதம்
2008
கங்குலி
கங்குலி(349)
உமர் குல்(12)
46
2009
மெக்குலம்
பிராட் ஹாட்ஜ்(365)
இசாந்த் சர்மா(11)
23
2010
கங்குலி
கங்குலி(493)
ஏ.டின்டா(9)
50
2011
கவுதம் கம்பீர்
காலிஸ்(424)
யூசுப் பதான்(13)
53
2012
கவுதம் கம்பீர்
கம்பீர்(590)
நரேன்(24)
70
2013
கவுதம் கம்பீர்
கம்பீர்(406)
நரேன்(22)
37
2014
கவுதம் கம்பீர்
உத்தப்பா(660)
நரேன்(21)
68
2015
கவுதம் கம்பீர்
உத்தப்பா(364)
ரஸல்(14)
53
2016
கவுதம் கம்பீர்
கம்பீர்(501)
ரஸல்(15)
53
2017
கவுதம் கம்பீர்
கம்பீர்(498)
கிறிஸ் வோக்ஸ்(17)
57
2018
தினேஷ் கார்த்திக்
கார்த்திக்(498)
குல்தீப் யாதவ்(17)
56
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago