ஓராண்டு தடைக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ள டேவிட் வார்னர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வருகை, கப்தில், பேர்ஸ்டோ, வில்லியம்ஸன் என அசுரபலத்துடன் ஐபிஎல் போட்டியில் கோப்பை கனவுடன் களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்த அணி பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என எதிலுமே அணியை குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு இது சரியான வாய்ப்பாகும்.
கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியத் தொடரில் விஜய் சங்கர் விளையாடியபோதிலும் தேர்வாளர்களை ஈர்க்கும் அளவுக்கு அவரின் ஆட்டம் அமையவில்லை. ஆனால், இதில் அவரின் ஆட்டம் ஜொலிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.
6 முறை
கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த சன் ரைசர்ஸ் அணி 6 சீசன்களில் இருமுறை மட்டுமே லீக் சுற்றோடு விடைபெற்றது. ஆனால், இருமுறை ப்ளை ஆப் சுற்றிலும், ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும், கடந்த ஆண்டு 2-வது இடத்தையும் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
இதுவரை ஐபிஎல் சீசனில் 93 ஆட்டங்களில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 51 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 41 தோல்விகளைச் சந்தித்துள்ளது, ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடருக்குள் நுழைந்ததில் இருந்து அணியில் அதிக ரன் குவித்தவர் டேவிட் வார்னர் மட்டுமே. டேவிட் வார்னர் 2,579 ரன்களும், பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் 112 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
வில்லியம்ஸன் சந்தேகம்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், கடந்த சீசனில் டேவிட் வார்னரால் விளையாட முடியாமல் போனது. ஆனால், இந்த சீசனுக்கு அவர் அணிக்குள் திரும்பி இருப்பது மிகப்பெரிய பலமாகும். ஆனால், கடந்த சீசனில் டேவிட் வார்னர் இல்லாத குறையை கேப்டனாக இருந்த கேன் வில்லியம்ஸன் போக்கினார். பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் பட்டையைக் கிளப்பி அணியை பைனல் வரை நகர்த்தினார். ஆனால், இப்போது வில்லியம்ஸன் தோள்பட்டை காயத்தில் சிகிச்சை பெற்றுவதால், அணியில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
தவண் இல்லை
சன் ரைசர்ஸ் அணியில் இருந்த முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவணுக்கும், அணி நிர்வாகத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து, அவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்தது சன் ரைசர்ஸ் நிர்வாகம். அதற்கு பதிலாக அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷாபாஷ் நதீம் ஆகியோரை பெற்றுக்கொண்டது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து நியூஸிலாந்து வீரர் மார்டன் கப்தில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, காயத்தால் வெளியே அனுப்பப்பட்ட விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா ஆகியோர் வாங்கப்பட்டனர். இதனால் வலுவான பேட்டிங் அமைந்துள்ளது.
ஷாபஸ் நதீம்
சித்தார்த் கவுல்
பயிற்சியாளர்கள்
இதுதவிர பயிற்சியாளராக டாம் மூடி, பந்துவீச்சுப் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன், ஆலோசகராக வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அணியைச் செதுக்கி மெருகேற்றுவார்கள்.
வார்னர் மீது கவனம்
இந்த முறை அனைவரின் கவனமும் ஒரு ஆண்டுக்குப் பின் களத்துக்கு வரும் டேவிட் வார்னர் மீதுதான். கடந்த ஓர் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது பேட்டிங் ஃபார்ம் குறையாமல் வைத்துள்ளதால், இந்த சீசனிலும் வார்னரின் வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் காணலாம்.
தொடக்க ஆட்டக்கார்களாக டேவிட் வார்னருடன் சேர்ந்து ஸ்ரீவஸ்தவா களமிறங்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மார்டின் கப்தில், அல்லது பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கலாம். இவர்களில் எந்த ஜோடி சேர்ந்தாலும் களத்தில் தூசு பறக்கும் அளவுக்கு வெளுத்து வாங்குவார்கள்.
வலுவான நடுவரிசை
நடுவரிசையில் கானே வில்லியம்ஸன், மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான், விருதிமான் சாஹா, தீபக் ஹூடா, ரிக்கிபுகி என மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் வில்லியம்ஸன், மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான் களமிறங்கவே வாய்ப்புள்ளது. பேர்ஸ்டோவும் கீப்பர் என்பதால் அவர் களமிறங்கும்போது விர்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்காது.
ஆல்ரவுண்டர்களில் இந்த சீசனுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வலுசேர்க்கிறார் விஜய் சங்கர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவை எனும்போது, விஜய் சங்கரும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கிறபோது, ஷகிப் அல்ஹசனும் அணிக்குள் இருப்பார்கள்.
விஜய்சங்கர்
ஆனால், இளமையும், துடிப்பும் மிகுந்த விஜய் சங்கர் தன்னை பிசிசிஐ தேர்வுக்குழுவிடம் நிரூபிக்க இது சரியான வாய்ப்பு. கிடைக்கும் வாய்ப்புகளில் விஜய் சங்கர் பட்டையைக் கிளப்பினால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் உண்டு.
சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவலிமையாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் எதிரணியை திக்குமுக்காட வைக்கும் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், முகமது நபி, ஷாபஸ் நதீம், அபிஷேக் சர்மா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இருக்கிறார்கள். கடந்த சீசனில் ரஷித் கான் பந்துவீச்சைக் கண்டு நடுங்காத வீரர்களே இல்லை எனலாம். கடைசி ஓவர்களை டெத் ஓவர்களாக வேகப்பந்துவீச்சுகு இணையாக வீசி அசத்தினார்.
நெருக்கடி தரும் பந்துவீச்சு
வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல், பில்லி ஸ்டான்லேக், பாசில் தம்பி, தமிழக வீரர் டி நடராஜன்,சந்தீப் சர்மா என அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இருக்கிறார்கள். புவனேஷ்வர் குமார் தலைமையில் இரு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், அது சித்தார்த் கவுல் அல்லது கலீல் அகமதுவாக இருக்கலாம். சிலநேரங்களில் ஸ்டேன்லேக், பாசில் தம்பிக்கும் கிடைக்கலாம். யாரையும் ஒதுக்க முடியாத அளவுக்கு துல்லியமான பந்துவீசும் வீரர்கள் இருப்பது பலமாகும்.
இந்த ஐபிஎல் சீசன் இந்திய வீரர்கள் விஜய் சங்கர், மணிஷ் பாண்டே, கலீல் அகமது ஆகியோருக்கு வாழ்வில் முக்கியமானதாகும். இதில் சிறப்பாகப் பந்துவீசி பேட் செய்தால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற முடியும்.
Rashid-Khan-Sjpgரஷித் கான் 100
துருப்புச்சீட்டு
இந்த சீசனுக்கு சன் ரைசர்ஸ் அணிக்கு முக்கியத் திருப்புச் சீட்டாக இருப்பவர் விஜய் சங்கர். எந்த நேரத்தில் அடிப்பார், பந்துகளை எவ்வாறு துல்லியமாக வீசுவார் என அறிவது கடினம். ஆனால், அடிக்கத் தொடங்கினால் பந்துகள் பறக்கும் என்பதால், அணிக்குள் இடம் பெற்றால், ரன்ரேட்டை உயர்த்திவிடக் கூடிய வீரராக விஜய் சங்கர் இருப்பார். 10 ஓவர்களுக்கு மேல் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் சராசரியாக பந்துவீசும் திறமை உடையவர் விஜய் சங்கர்.
தீவிர எதிரி சிஎஸ்கே
கடந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்தது சன் ரைசர்ஸ் அணிதான். ஆனால் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஹைதராபாத் பணிந்துவிட்டது. இறுதி ஆட்டம் மட்டும் அல்ல அந்த சீசனில் லீக் சுற்றில் இரு ஆட்டங்கள், பிளே ஆஃப் தகுதி சுற்று ஆகியவற்றிலும் சென்னை சூப்ப் கிங்ஸை வீழ்த்த முடியாமல் ஹைதராபாத் அணி தோல்வி கண்டது. ஆனால், இந்த சீசனில் டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளது, வில்லியம்ஸன், விஜய் சங்கர், பேர்ஸ்டோ, கப்தில் ஆகியோர் இருப்பது அணிக்கு வலுசேர்க்கும். இந்த சீசனிலும் சிஎஸ்கே கடும் போட்டியாளராக சன் ரைசர்ஸ் அணிக்கு இருக்கும்.
பலவீனம்
சன் ரைசர்ஸ் அணியின் பலவீனம் நடுவரிசையிலும், பின்வரிசையிலும் ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாததுதான். கடந்த தொடரில் தொடக்க வீரர்கள் ஸ்கோர் செய்துகொடுத்தாலும், நடுவரிசையில் களமிறங்கும் வீரர்கள் சரியாகப் பயன்படுத்தமாட்டார்கள். இதனால், கேப்டன் கேன் வில்லியம்ஸ் பெரும்பாலான போட்டிகளில் நின்று ஆட வேண்டிய சூழல் இருந்தது. நடுவரிசையில் பலம் இல்லாத காரணத்தினால்தான், அதிகமாக ஸ்கோர் செய்ய முடியாமல் சராசரியான ரன்களையே அடிக்க முடிந்தது.
தொடக்க வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளது அணிக்குப் பின்னடைவு என்றாலும் அதை சரிகட்ட பேர்ஸ்டோ, கப்தில் இருக்கிறார்கள். இவர்களோடு மணிஷ் பாண்டே தொடக்க வீரர்களாக களமிறங்கி தவண் இல்லாத குறையை மறைக்க வேண்டியது அவசியம்.
வரும் 24-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago